சந்திர கிரகணம் முடிந்ததும் இந்த 5 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க
கிரகணம் என்பது இந்து மதத்தில் மிக முக்கியமான காலமாக கருதப்படுகிறது. சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் என ஒரு ஆண்டுக்கு நான்கு அல்லது ஐந்து கிரகணங்கள் நிகழ்வது உண்டு.
கிரகணம் என்பது இயற்கையாக நடக்கும் ஒரு வானியல் மாற்றம் என்றாலும் இது அறிவியல் ரீதியாக மட்டுமின்றி, ஆன்மீக ரீதியாகவும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
கிரகண நேரம் பெரும்பாலும் தீய விளைவுகளையே ஏற்படுத்தும் என்பதாலேயே கிரகண நேரத்தில் செய்யக் கூடாத விஷயங்கள் என சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்படுகின்றன. இவற்றை தவிர்ப்பதால் கிரகணங்களால் ஏற்படும் பாதிப்புக்களை தவிர்க்க முடியும்.
குறிப்பாக உடல் ஆரோக்கியத்தில் ஏற்படும் பாதிப்புக்களில் இருந்து நம்மை காத்துக் கொள்ள முடியும். இந்த ஆண்டின் கடைசி மற்றும் இரண்டாவது சந்திர கிரகணம் செப்டம்பர் 07ம் திகதியான இன்று நிகழ உள்ளது. செப்டம்பர் 07ம் திகதியன்று இரவு 09.57 மணி துவங்கி, செப்டம்பர் 08ம் திகதி அதிகாலை 01.37 வரை சந்திர கிரகணம் நிகழ உள்ளது.
இது முழு சந்திர கிரகணமாக நிகழ உள்ளதால் இதை வெறும் கண்களால் பார்க்க முடியும் என சொல்லப்படுகிறது.
சந்திர கிரகணம் முடிந்ததும் செய்ய வேண்டிய 5 விஷயங்கள்
வழக்கமாக கிரகண நேரங்களில் அனைத்து கோவில்களிலும் நடைசாத்தப்பட்டிருக்கும்.இந்த சந்திர கிரகணம் இரவு நேரத்திலேயே நடைபெறுவதாக இருந்தாலும் தமிழகத்தில் உள்ள பல முக்கிய கோள்விகளில் செப்டம்பர் 07ம் திகதியன்று பகல் 1 மணியில் இருந்தே கோவில் நடைசாத்தப்பட்டு விடும் என்றும், மீண்டும் செப்டம்பர் 08ம் திகதி அதிகாலை கிரகண சாந்தி பூஜை முடிந்த பிறகு, வழக்கமான பூஜைகளுக்கு பிறகு பக்தர்கள் அனைவரும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக கிரகண நேரத்தில் என்ன செய்ய வேண்டும், எவற்றை எல்லாம் தவிர்க்க வேண்டும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் கிரகணங்களால் ஏற்படும் தீய சக்திகளின் தாக்கம் நம்மை தாக்காமல் இருப்பதற்காக கிரகண காலம் முடிந்த பிறகு சில விஷயங்களை கண்டிப்பாக செய்ய வேண்டும்
செப்டம்பர் 08ம் திகதியன்று காலையில் எழுந்ததும் குளித்து விட வேண்டும். கல் உப்பு, மஞ்சள், வேப்பிலை கலந்த நீரால் குளிக்க வேண்டும்.
பிறகு கல் உப்பு, மஞ்சள் கலந்த நீரால் வீடு மற்றும் பூஜை அறையை சுத்தம் செய்ய வேண்டும். கல் உப்பு, மஞ்சள் கலந்த நீரை வீடு முழுவதும் தெளித்து விட வேண்டும்.
வீட்டில் உள்ள சாமி படங்களை மஞ்சள் கலந்த நீரால் துடைத்து விட்டு, வீட்டில் ஏதாவது தீர்த்தம் இருந்தால் பூஜை அறையில் தெளித்து விடலாம். பூஜை அறையையும், வீட்டையும் புனிதமாக்கிய பிறகு வீட்டில் உள்ள தெய்வங்களுக்கு நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும்.
வீட்டில் சாமி சிலைகள், வேல் ஏதாவது வைத்திருந்தால் பால், சந்தனம், மஞ்சள் நீர், தேன் ஆகியவற்றால் அபிஷேகம் செய்ய வேண்டும். சாமிக்கு படைத்த நைவேத்தியத்தை முதலில் மற்றவர்களுக்கு கொடுத்த பிறகு தான் நாம் சாப்பிட வேண்டும்.
வீட்டில் உள்ள வாகனங்களையும் சுத்தமான தண்ணீரால் சுத்தம் செய்து எலுமிச்சை கட்டுவதால் கிரகணத்தால் ஏற்பட்ட அபரிமிதமான தீயசக்திகளின் பாதிப்பில் இருந்து மீளலாம்.
கிரகணத்திற்கு பிறகு தான, தர்மங்கள் செய்வத மிகவும் விசேஷமானதாகும். அதிலும் பால், அரிசி, தானியங்கள் போன்றவற்றை தானம் செய்வது சிறப்பு. இல்லாவிட்டால் முடிந்த அளவிற்கு இரண்டு பேருக்காவது அன்னதானம் செய்யலாம்.