டயட்டில் இருப்பவரா நீங்கள்; மறந்தும் இந்த 5 டயட்டை ஃபாலோ பண்ணிடாதீங்க!
தற்தைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் உடல் எடையைக் குறைக்க மட்டுமின்றி, உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், நீண்ட நாள் உயிர்வாழ வேண்டும் என்பதற்காகவும் டயட்டுகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
அதற்கேற்ப பல்வேறு டயட்டுகளும் இணையத்தில் உலா வருகின்றன. அதில் கீட்டோ டயட், டிடாக்ஸ் டயட், FAD டயட் போன்றவை மிகவும் பிரபலமானவை மற்றும் ஏராளமான மக்கள் இந்த வகையான டயட்டை அதிகம் பின்பற்றி வருகிறார்கள்.
ஆனால் இப்படி டயட்டை மேற்கொள்ள நினைக்கும் பலர், அந்த டயட்டுகளைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளாமல், அரைகுறையாக தெரிந்து கொண்டு பின்பற்றுகிறார்கள்.
முக்கியமாக அந்த டயட் தங்கள் உடலுக்கு சரியானதா என்பதை தெரிந்து கொள்ளாமல் பின்பற்றுகிறார்கள். இதன் விளைவாக பலவிதமான பிரச்சனைகளை சந்திக்கிறார்கள்.
உடலுக்கு தீங்கை விளைவிக்கும் டயட்டுகள்
1. கலோரி குறைவான டயட் (Low Calorie Diet)
அதிகப்படியான கலோரிகளானது உடல் எடையை அதிகரிக்கும். அதற்காக கலோரிகளை உட்கொள்வதை நிறுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் எப்போதும் பரிந்துரைப்பதில்லை.
மாறாக சரிவிகித டயட்டை மேற்கொள்ளவே கூறுவார்கள். ஆனால் உடல் எடையைக் குறைக்க நினைக்கும் பலர் கலோரிகளை முழுமையாக நிறுத்திவிடுகிறார்கள்.
இதன் விளைவாக முக்கியமான சில ஊட்டச்சத்துக்களை இழக்க நேரிடுகிறது. ஒருவர் கலோரிகளை மிகவும் குறைவாக எடுத்தாலோ அல்லது எடுப்பதைத் தவிர்த்தாலோ, அது நோயெதிர்ப்பு சக்தியை குறைக்கும், தசையை இழக்கச் செய்யும், ஊட்டச்சத்து குறைபாடுகளை ஏற்படுத்தும் மற்றும் உறுப்புக்களை சேதப்படுத்தும்.
2. டிடாக்ஸ் டயட் (Detox Diet)
இந்த டிடாக்ஸ் டயட்டுகளை பின்பற்றுவது மிகவும் நல்லது தான். ஆனால் அதை நிபுணர்களின் மேற்பார்வையின் கீழ் பின்பற்ற வேண்டும். பல டயட்டுகள் போதுமான அறிவியல் சான்றுகளை கொண்டிருக்கவில்லை.
எனவே வெறுமனே இணையத்தில் கிடைக்கும் தகவல்களை கொண்டு டயட்டுகளை மேற்கொள்ள முயற்சிக்காதீர்கள். இல்லாவிட்டால், அதன் விளைவாக பேராபத்தை சந்திக்க நேரிடும்.
3. கீட்டோ டயட் (Keto Diet)
கீட்டோ டயட் என்பது தற்போது நிறைய பேர் மேற்கொள்ளும் பிரபலமான டயட் ஆகும். இந்த வகையான டயட்டை சரியாக நிபுணர்களின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளாவிட்டால் மிகுந்த சிக்கலை சந்திக்க நேரிடும்.
கீட்டோ டயட்டை முறையாக மேற்கொள்ளாமல் இருந்தால், அதன் விளைவாக ஊட்டச்சத்து குறைபாடுகள், எலக்ட்டோலைட் ஏற்றத்தாழ்வுகள், கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் போன்ற உறுப்புக்களில் சேதம் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
4. FAD டயட்
சமீப காலமாக இந்த FAD டயட் மக்களிடையே பிரபலமாக உள்ளது. ஆனால் இந்த டயட்டிற்கு எவ்வித அறிவியல் சான்றுகளும் இல்லை. இந்த டயட்டை மேற்கொள்ளும் போது குறுகிய காலத்தில் எதிர்பார்த்த பலனைப் பெறலாம்.
ஆனால் நீண்ட கால விளைவுகளானது மோசமாக இருக்கும். அதில் FAD டயட்டினால் சந்திக்கக்கூடிய மிகவும் முக்கியமான பிரச்சனை ஊட்டச்சத்து குறைபாடு. இந்த ஊட்டச்சத்து குறைபாடு தீவிரமானால், அது ஒருவரை அழிக்கவும் செய்யும்.
5. சப்ளிமெண்ட்டுகளை எடுப்பது
உடலில் சத்துக்கள் குறைவாக இருப்பவர்களுக்கு மருத்துவர்கள் சப்ளிமெண்ட்டுகளை பரிந்துரைப்பார்கள். நீங்கள் உங்கள் உடலில் சத்துக்கள் குறைவாக இருப்பதை உணர்ந்தால், அதற்கு உடனே நீங்களாக சப்ளிமெண்ட்டுகளை வாங்கி போடாதீர்கள்.
மருத்துவரின் அறிவுரையின்றி சப்ளிமெண்ட்டுகளை அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது, அது தூக்கம் மற்றும் ஆற்றலில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.