உடற்பயிற்சிகளை செய்யும் முன் மறந்தும் கூட இந்த உணவுகளை சாப்பிடாதீர்கள்
தினமும் உடற்பயிற்சி மேற்கொள்வதும் அவசியமான ஒன்றாகும். உடற்பயிற்சிகளை செய்யும் முன் என்ன சாப்பிடலாம், என்ன சாப்பிடக்கூடாது என்பதையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும். ஏனென்றால் நீங்கள் உடற்பயிற்சி செய்வதற்கும் ஆற்றல் தேவை. அவை உங்களின் உணவுகளில் இருந்துதான் உங்களுக்கு கிடைக்கும்.
நீங்கள் உடற்பயிற்சியை மேற்கொள்ளும்போது உங்களுக்கு அசௌகரியத்தை வழங்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும். உணவுகளில் கவனம் செலுத்தினால்தான் நீங்கள் செய்யும் உடற்பயிற்சியின் மூலம் தக்க பலன்கள் கிடைக்கும்.
உடற்பயிற்சி மூலம் உடலில் நல்ல ஆரோக்கியத்தை பெற நாம் எவ்வாறு உணவுகளை சாப்பிடக்கூடாது என பார்ப்போம்.
கொழுப்பு நிறைந்த உணவுகள்
பர்கர், பிட்சா, பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள், பிரஞ்சு ஃப்ரைஸ் போன்ற உணவுகளை உடற்பயிற்சிக்கு முன் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இவற்றில் அதிக கொழுப்புச்சத்து உள்ளன. சிப்ஸ், சமோசா ஆகியவற்றையும் இவற்றுடன் சேர்க்கலாம். இவை உங்களுக்கு உப்புசம், குறைந்த ஆற்றல் மற்றும் அசௌகரியத்தை அளிக்கும்.
யோகர்ட்
இதில் அதிக புரதம் மற்றும் லாக்டோஸ் உள்ளன. இது செரிமானத்தில் பிரச்னையை ஏற்படுத்தும். தேவையான ஊட்டச்சத்தை அளித்தாலும் கூட அதன் கிரீம் மற்றும் அடர்த்தி உடற்பயிற்சி செய்யும்போது உப்புசம், சதை பிடிப்பு, வயிற்று வலி உள்ளிட்ட பிரச்னைகளை ஏற்படுத்தலாம்.
நட்ஸ் மற்றும் விதைகள்
இது ஆரோக்கியமானவை என்றாலும் உடற்பயிற்சிக்கு முன் சாப்பிடுவது நல்லது அல்ல. இதில் அதிக கொழுப்பு மற்றும் நார்ச்சத்து இருக்கின்றன. எனவே இது செரிமானத்திற்கு அசௌகரியத்தை உண்டு பண்ணும், உப்புசம் ஏற்படலாம். அதிக கலோரிகள் கொண்டதால் உங்களின் ஆற்றல் திடீரென குறைந்து, உங்களால் உடற்பயிற்சியை முழுமையாக செய்ய இயலாது.
இனிப்பான உணவுகள், குளிர்பானங்கள்
இனிப்பு நிறைந்த உணவுகளிலும், குளிர்பானங்களிலும் எப்போதுமே ஜீரோ கலோரிகள்தான். அதாவது, ஊட்டச்சத்து என்பதே இல்லை. இதை குடித்துவிட்டு, சாப்பிட்டுவிட்டு உடற்பயிற்சி மேற்கொண்டால் ஆற்றல் குறையும், செரிமான பிரச்னை ஏற்படும்.
பால் மற்றும் பால் சார்ந்த பொருள்கள்
அதிக லாக்டோஸ் அளவும், புரதச்சத்தும் கொண்ட பாலை நீங்கள் உடற்பயிற்சிக்கு முன் எடுக்கவே கூடாது. இது செரிமான ஆரோக்கியத்தை பாதிக்கும். உடற்பயிற்சிக்கு பின்னர் கூட பால் அருந்தலாம். அதேபோல், அதிக கொழுப்புச் சத்து நிறைந்த பால் பொருள்களான சீஸ் உடற்பயிற்சிக்கு முன் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டியதாகும்.