வெள்ளிக்கிழமைகளில் மறந்து இவற்றினை செய்யாதீர்கள்!
மகாலட்சுமிக்கு உகந்த நாளாக வெள்ளிக்கிழமை கருதப்படுகிறது. நம்மிடம் செல்வம் வருவதற்கும், நிரந்தரமாக தங்குவதற்கும் மகாலட்சுமியை நாம் மனதார வழிபடவேண்டும்.
வெள்ளிக் கிழமை
பொதுவாக வெள்ளிக் கிழமை என்பது தெய்வத்திற்குரிய கிழமையாக இருக்கிறது. வாரத்தின் மற்ற நாட்களில் பூஜை செய்யவில்லை என்றாலும் வெள்ளிக்கிழமையில் பலர் தங்களது வீடுகளில் பூஜை செய்வது வழக்கம்.
வெள்ளிக் கிழமைகளில் சில காரியங்களை செய்தால் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கலாம்.
வெள்ளிக்கிழமைகளில் நம்மிடம் உள்ள செல்வத்தை மற்றவர்களுக்கு கடனாக கொடுப்பது போன்ற செயல்களால், லட்சுமி நம்மை விட்டு நிரந்தரமாகவே சென்று விடுவாள் என்பது ஐதீகம்.
அதே போல நாம் வசிக்கும் வீடு எந்த அளவிற்கு தூய்மையாகவும், மங்களகரமாகவும் இருக்கிறதோ, அந்த அளவிற்கு திருமகளின் அருளும் அந்த இல்லத்தில் நிறைந்திருக்கும்.
வெள்ளிக்கிழமைகளில் செய்யக் கூடாத விஷயங்கள்
நமது சாஸ்திரம் சில அடிப்படையான விஷயங்களை வகுத்து வைத்திருக்கிறது. உங்களுக்குத் தெரியாமலேயே இதையெல்லாம் நீங்க இதுநாள் வரையில் செய்து வந்திருந்தால், அதுவே கூட உங்களுடைய வளர்ச்சிக்கு தடையாக இத்தனைக் காலங்களும் இருந்திருக்கலாம்.
எனவே இதற்கு மேலும் அவாறான காரியங்களை செய்வதை நீங்கள் தவிர்க்கலாம். வெள்ளிக்கிழமைகளில் பணம் கடன் கொடுப்பது, அரிசி வறுப்பது, புடைப்பது கூடாது.
குறிப்பாக பச்சரிசியை அஜாக்கிரதையாக கையாளாதீர்கள். அப்புறம் பால், தயிர், பச்சைக் காய்கறிகள் ஆகியவற்றை இரவில் கடன் வாங்குதல், கடன் கொடுத்தல் இரண்டுமே கூடவே கூடாது.
வெள்ளிக்கிழமைகளில் பால் பொங்கி கீழே வழியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். விளக்கு வைத்த பிறகு தலைவாருதல், பேன் பார்த்தல், முகம் கழுவுதல் போன்ற செயல்களைச் செய்யக் கூடாது.
விளக்கு வைத்த பிறகு குப்பை, கூளங்களை வெளியே வீசக் கூடாது.
காலை அல்லது மாலை நேரங்களில் வீட்டில் உள்ள மற்றவர்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போது, விளக்கேற்றக் கூடாது.
வெள்ளிக்கிழமைகளில் நகம், முடி போன்றவற்றை வெட்டக் கூடாது.