வாக்குச்சீட்டில் இதை செய்ய வேண்டாம் ; தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்ட தகவல்
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்களிப்புக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் , தேசிய அடையாள அட்டை, வாகன அனுமதி பத்திரம் மற்றும் செல்லுபடியாகும் கடவுச்சீட்டு ஆகியவற்றை எடுத்து வரவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
வாக்களிப்புக்கான தங்களுடைய ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக, அலுவலக அடையாள அட்டை, தேசிய அடையாள அட்டை பெறுவதற்காக விண்ணப்பம் செய்தமைக்கான பிரதி ஆகியவற்றை எடுத்து வரவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
வாக்குச்சீட்டு
அத்துடன், வாக்குச்சீட்டில் கட்சிகளின் பெயர்களுக்கு எதிரே கட்சிகளின் சின்னங்களும் சுயேச்சைக்குழுக்களின் பெயர்களுக்கு எதிரே சுயேச்சைக் குழுக்களின் சின்னங்களும் இருக்கும், அதற்கு எதிராக வெற்றுக்கட்டம் இருக்கும், அதில் புள்ளடி (X) இடவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
வாக்குச்சீட்டில் எழுதவோ, சித்திரம் கீறவோ, கிறுக்கவோ, எண்ணங்களை எழுதவோ, பெயர்களை எழுதவோ வேண்டாம்.
புள்ளடி (X) இடப்படாத எந்தவொரு வாக்குச்சீட்டும் நிராகரிக்கப்படும் என்றார்.