கடந்த கால அரசாங்கங்களை விமர்சிக்காதீர்கள்; நாமல் ராஜபக்ச
கடந்த கால அரசாங்கங்களை விமர்சிக்காது நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் முறையாக நிறைவேற்ற வேண்டும் என பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று புதன்கிழமை (1) நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே நாமல் ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது அவர் மெலும் கூறுகையில்,
நாட்டு மக்களுக்கு பல வாக்குறுதிகளை வழங்கியே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. ஆகவே அதனை நிறவேற்ற வேண்டும் எனவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
ராஜபக்ஷர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்புரிமைகளை குறைப்பதால் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியும் என்று அரசாங்கம் கருதினால் அதற்கும் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்.
கடந்த அரசாங்கங்களை விமர்சித்துக் கொண்டிருக்காமல் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் இந்த ஆண்டு நிறைவேற்ற வேண்டும் என்றார்.