மாரவில கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கிய டொல்பின்!
புத்தளம் மாரவில கடற்கரையில் உயிரிழந்த நிலையில் டொல்பின் ஒன்று கரையொதுங்கியுள்ளதாக அப்பகுதி மக்கள் ஆனைவிழுந்தான் வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
தகவலறித்து அப்பகுதிக்கு வந்த வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் குறித்த டொல்பினை உடற்கூற்று பரிசோதனைக்காக ஆனைவிழுந்தான் வனஜீவராசிகள் திணைக்கள அலுவலகத்திற்கு கொண்டுச் சென்றனர்.

மேலும், உயிரிழந்த டொல்பின் சுமார் 10 அடி நீளமுடையதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொழும்பு துறைமுக கடற்பரப்பிற்கு வெளியே சில மாதங்களுக்கு முன்பு எம்.வி. எக்ஸ்பிரஸ் கப்பல் தீப்பிடித்து எரிந்ததையடுத்து கடலாமைகள், டொல்பின்கள், திமிங்களங்களென பல உயிரினங்கள் தொடர்ந்தும் உயிரிழந்து வருவதுடன் புத்தளம் மாவட்டத்திலேயே அதிகளவிலான உயிரினங்கள் உயிரிழந்தமைக் குறிப்பிடத்தக்கது.
