நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாடு...தேங்கிய 200 கொள்கலன்கள்
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாடு காரணமாக 800 கொள்கலன்களில் 200 கொள்கலன்களை விடுவிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
உணவுப்பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிக்க நேற்றைய தினம் வரையில் 75 சதவீத டொலர்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதில் ஒவ்வொரு இறக்குமதியாளர்களின் வங்கி கணக்குகளுக்கு கிடைக்கும் டொலரின் அடிப்படையில் குறிப்பிட்ட கொள்கலன்களை விடுவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போது உணவுப்பொருட்களை உள்ளடங்கிய 800க்கும் அதிகமான கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியுள்ளன. அவற்றை விடுவித்துக்கொள்வதற்கு 50 மில்லியன் டொலர் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய வங்கி, இரு தினங்களுக்கு முன்னா் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது.
ஆனால் அந்த நிதியில் 200க்கும் அதிகமான கொள்கலன்களை விடுவிக்க போதுமான நிதி கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.