இறந்துபோன எஜமானுக்காக 4 மாதங்களாக காத்திருக்கும் நாய்; நெகிழவைத்த சம்பவம்
நாய் நன்றியுள்ள பிராணி என்பது பலர் கூற நாம் கேள்விப்பட்டிருப்போம். வீட்டினை காப்பததுடன் தன்னை வளப்போரிடமும் எவ்விதபிரதி பலனையும் எதிர்பாராது மிகவும் விஸ்வாசத்துடன் காவல்காத்து இருப்பது என்றால் அது ஐந்தறிவுள்ள நாய்தான். மனிதர்கள் கூட பல சமயங்களில் நன்றி மறந்தவர்களாகின்றனர். ஆனால் நாயானது நன்றி மறவாதது.
இந்நிலையிஒல் , தனது எஜமானர் இறந்தது தெரியாமல், அவரது வளப்பு நாய் கடந்த 4 மாதங்களாக அவருக்காக காத்திருப்பதாக கூறப்படுகின்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் கேரள மாநிலம் கண்ணூர் மாவட்ட வைத்தியசாலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு உடல் நலம் சரியில்லாத ஒருவரை உறவினர்கள் சிகிச்சைக்காக அழைத்து வந்தபோது . அவர்களுடன், அவர் வளர்த்த நாயும் வந்துள்ளது.

உடலை எடுத்துச்சென்ற உறவினர்கள்
வைத்தியசாலையில் சிகிறைச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகின்றது. அவரது உடல் அங்குள்ள சவக்கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனைக்கு பின்னர், உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.
உறவினர்கள் உயிரிழந்தவ்ரின் உடலை மற்றொரு வாசல் வழியாக எடுத்துச் சென்று இறுதிச் சடங்கு செய்துள்ளனர்.

இந்நிலையில் இதை அறியாத அவருடைய வளர்ப்பு நாய், சவக்கிடங்கு வாசலில் கடந்த 4 மாதமாக தனது எஜமானுக்காக காத்துக் இருக்கும் நிலையில் , வைத்தியசாலை ஊழியர் ராஜேஷ் அதனை கவனித்துள்ளார்.
சவக்கிடங்கு அருகே காத்திருக்கும் நாய்
முதலில் சில நாட்களாக அந்த நாய் உணவு ஏதும் சாப்பிடாமல் இருந்துள்ளது. அதன்பின்னர், சிலர் வழங்கும் பிஸ்கட் மற்றும் இதர உணவுகளை சாப்பிட்டு, தனது எஜமானர் திரும்பி வருவார் என்ற நம்பிக்கையில் சவக்கிடங்கு அருகே காத்துக் கிடக்கிறது.

அருகில் உள்ள பிசியோதெரபி கட்டடத்துக்கும் சவக்கிடங்குக்கும் மாறி மாறி சென்று வருவதாகவும், தற்போது அந்த நாய்க்கு, அந்த வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் தனது வீட்டில் இருந்து உணவு கொண்டு வந்து கொடுப்பதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் தனது எஜமான் இறந்தது தெரியாது அவருக்காக காத்திருக்கும் நன்றியுள்ள அந்த ஜீவனை வளர்க்க பருல் விருப்பம் தெரிவித்துள்ளார்களாம்.  
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        