நாய் விவகாரம்; நக்ஷ்டஈடு கோரும் ஆஷு மாரசிங்க!
பேராசிரியர் ஆஷு மாரசிங்க பற்றி சித்தரிக்கப்பட்ட காணொளியை வெளியிட்டு அந்த காணொளிக்கு தவறான விளக்கத்தை அளித்து அவதூறு பரப்பியதற்காக ஜனாதிபதியின் முன்னாள் ஆலோசகர் ஆஷு மாரசிங்க நக்ஷ்டஈடு கோரியுள்ளார்.
தனக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பில் ஹிருணிகா பிரேமச்சந்திர 1.5 பில்லியன் ரூபாயும் மற்றும் ஆதர்ஷ கரதன 1 பில்லியன் ரூபாயும் நஷ்டஈடு வழங்க வேண்டும் எனவும் பேராசிரியர் ஆஷு மாரசிங்க கடிதம் அனுப்பியுள்ளார்.
நாய் மீது பாலியல் துஸ்பிரயோகம்
கடந்த 23 ஆம் திகதி ஹிருணிகா மற்றும் ஆதர்ஷா நடத்திய ஊடகவியலாளர் மாநாடு பொதுமக்களை தவறாக வழிநடத்தும் நோக்கத்தில் அமைந்ததாகவும் அதன் மூலம் பேராசிரியர் ஆஷு மாரசிங்கவிற்கு எதிராக தவறான முறையில் பொதுக் கருத்தை உருவாக்குவதாகவும் குறித்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த காணொளி மற்றும் அது தொடர்பான புகைப்படங்கள் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கடந்த 24ம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்திருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பேராசிரியர் ஆஷு மாரசிங்க வளர்ப்பு நாயை பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்டதாக ஹிருணிகா பிரேமச்சந்திர ஊடக சந்திப்பில் தெரிவித்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.