இலங்கையின் வான்வெளி இந்தியாவிற்கு சொந்தமாகின்றதா? வெளியான பரபரப்பு தகவல்
பாதுகாப்பு கட்டமைப்பு என்ற போர்வையில் இலங்கையின் முழு வான்பரப்பையும் இந்தியாவிற்கு விற்பனை செய்ய இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சி எம்பி ஹரின் பெர்னாண்டோ குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கையின் கடல்சார் மீட்புப்பணிகளுக்கான ஒருங்கிணைப்பு மையம் அமைக்க 60 லட்சம் டாலர் அளிக்க இந்திய ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் இலங்கை கடற்பரப்பில் மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்க இந்தியா கண்காணிப்பு விமானத்தை வழங்குகின்றது.
இதன்காரணமாக இலங்கையின் வான்வெளி இந்தியாவின் கட்டுப்பாட்டிற்குள் செல்லும் என எதிர்க்கட்சி எம்பி ஹரின் பெர்னாண்டோ குற்றம் சுமத்தியுள்ளார்.
அதேசமயம் நாட்டின் வளங்கள் இந்தியாவிற்கு விற்பனை செய்யப்படவில்லை " என அரசாங்கம் மறுப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .