கிண்ணியா விபத்து; வைரலாகும் ஆவணம்
இன்று காலை திருகோண்மலையில் இடம்பெற்ற படகு விபத்து நாடு முழுவதும் பெந்ரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பற்ற படகுச்சேவையாலும், பிரதேசத்திற்கு பொறுப்பான அரசியல்வாதிகளின் மெத்தனத்தாலும் இந்த விபத்தில் அநியாயமாக பலர் உயிரிழந்துள்ளனர்.
சம்பந்தப்பட்டவர்களின் பலியான உயிரிகளுக்கு யார் பொறுப்பு. பாடசாலைக்கு சென்ற பிள்ளைகள் முதல் தமது சேவைகளை நிறைவேற்றிகொள்ள சென்ற பொதுமக்கள்வரை பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இது குறித்து பலரும் தமது ஆதங்கங்களை வெளியிட்டு வரும் நிலையில், கிண்ணியா நகர சபை விபத்துக்குல்லான பாதைக்கு அனுமதி வழங்கியது பற்றிய ஆவணம் ஒன்று சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டு வருகின்றது.
இந்த ஆவணத்தில் குறிப்பிடப்ப்டுள்ள விடயங்கள் பரிசீலனை செய்யப்பட்டிருப்பின் இன்றைய தினம் இவ்வளவு பெரிய துயர சம்பவம் இடம்பெற்றிருக்காது என பலரும் வேதனை வெளியிட்டுள்ளனர்.