கறுப்பு பட்டி அணிந்து மருத்துவர்கள் பணி
வைத்தியர்கள் உட்பட பல தொழில்களைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் இன்று (23) கறுப்பு பட்டி அணிந்து பணிக்கு சமூகமளித்திருந்தனர்.
அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கைக்கு எதிராக தொழில் வல்லுநர்கள் சங்கத்தினால் இன்று (23) ஆரம்பிக்கப்பட்டுள்ள கறுப்பு வாரத்திற்கு ஆதரவாகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கறுப்பு வாரத்திற்கு ஆதரவாக வங்கி ஊழியர்களும் கருப்பு உடை அணிந்து பணிபுரிவதாக அறிவித்திருந்தனர்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே,
“இன்று துவங்கும் வாரத்தில் கருப்பு பட்டை அணிந்து தங்கள் பணியை செய்வார்கள். மேலும், கருப்பு பேனர்கள் ஏந்தியும், கறுப்பு கொடி ஏந்தியும் போராட்டம் நடத்துவார்கள் என தெரிவித்தார்.