பாடசாலை வினாத்தாளில் வைத்தியர் அர்ச்சுனா; கல்வியமைச்சுக்கு சென்ற கடிதம்!
யாழ்ப்பாணம் வடமராட்சி வலய கல்வி அலுவலகத்தினால் அண்மையில் நடத்தப்பட்ட பரீட்சையில், பாடசாலை வினாத்தாளில் வைத்தியர் அர்ச்சுனா தொடர்பாக கேள்வி வந்தமை தொடபில் கல்வி அமைச்சுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகளில் இடம்பெற்ற இரண்டாம் தவணை பரீட்சை இடம்பெற்ற நிலையில் குடியியல் பாடத்தில் கேட்கப்பட்ட கேள்விகள் ஒன்றிலேயே இவ்வாறு மருத்துவர் அருச்சுனா பெயரில் கேள்வி இருந்துள்ளது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆட்சேபனை
இந்நிலையில் இந்த சம்பவம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் விதமாக கேள்வியொன்று இடம்பெற்றது தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆட்சேபனை தெரிவித்துள்ளது.
அத்துடன் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளரின் கையொப்பத்துடன், வடமாகாண கல்வியமைச்சின் செயலாளருக்கு இது தொடர்பிலான கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
