கெளுத்தி மீன் சாப்பிடுவதால் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா? அவசியம் அறிந்துகொள்ளுங்கள்
பொதுவாக மீன் இறைச்சி என்பவற்றில் புரதம் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன . எனினும் அவற்றில் உயர்தர புரதம் நிறைந்த மற்றும் குறைந்த கலோரி கொண்ட ஒரு மீன் என்றால் அது கெளுத்தி மீன் என சொல்லலாம்.
இந்த மீன் இறைச்சியில் குறைந்த கலோரி உள்ளடக்கம் இருப்பதன் காரணமாக, எடை இழக்க விரும்புவோர் அல்லது குறைந்த கலோரி உணவுகளை எடுத்துக்கொள்ள விரும்புவோருக்கு இது சரியான தேர்வாக இருக்கும் என சொல்லப்படுகின்றது.
கெளுத்தி மீனின் ஆரோக்கிய நன்மைகள்
எடை இழப்பை ஊக்குவிக்கும்
கெளுத்தி மீனில் அதிக புரதம் மற்றும் குறைந்த கொழுப்பு உள்ளடக்கம் உள்ளது. கலோரி உட்கொள்ளலைக் குறைக்க முயற்சிக்கும் மக்கள் கெளுத்தி மீனை தங்கள் உணவு வழக்கத்தில் சேர்த்துக்கொள்ளலாம். இதில் அதிக புரதமும், அதோடு கொழுப்பு மற்றும் கலோரிகள் குறைவாக இருப்பதால், உடலில் அதிகப்படியான கொழுப்பை அகற்ற உதவுகிறது.
அதிக புரதம்
கெளுத்தி மீன் உயர்தர புரதத்தால் நிரம்பியுள்ளது, அதாவது இது உடலுக்குத் தேவையான அனைத்து அத்தியாவசிய அமினோ அமிலங்களையும் கொண்டுள்ளது. 100 கிராம் கெளுத்தி மீனில் 13 கிராம் புரதம் உள்ளது. நமது உடலுக்கு உயிரணுக்களை சரிசெய்து புதியவற்றை உருவாக்க புரதம் மிகவும் அவசியம்.
இது திசுக்கள், தசைகள் மற்றும் ஒட்டுமொத்த உடலுக்கான அடித்தளத்தை உருவாக்குகிறது. வளரும் குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் இளம் வயதினருக்கு புரதங்கள் மிகவும் அவசியம்.
இதய ஆரோக்கியம்
கெளுத்தி மீன், EPA மற்றும் DHA ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களால் நிறைந்துள்ளது.இந்த கெளுத்தி மீன் நல்ல இதய ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியத்தை பராமரிக்க மிகவும் முக்கியம் ஆகும். இந்த கெளுத்தி மீனை வழக்கமாக உணவில் சேர்த்துக்கொண்டால் இதய நோய்கள் மற்றும் மனச்சோர்வு போன்ற பிரச்சினைகள் ஏற்படாது.
குறைந்த கார்போஹைட்ரேட்டுகள்
கெளுத்தி மீன் இறைச்சி கார்போஹைட்ரேட்டுகள் இல்லாதது மற்றும் எடை இழப்புக்கு ஒரு சிறந்த வழி. மதிய உணவிற்கு இதை எடுத்துக்கொண்டாலும், உங்களுக்கு சோம்பல் அல்லது தூக்க கலக்கம் போன்ற பிரச்சினைகள் இருக்காது.
மூளை ஆரோக்கியம்
மீன் இறைச்சி சாப்பிடுவதால் மூளையின் ஆரோக்கியம் மேம்படும். கெளுத்தி மீனில் DHA உள்ளது (டோகோசஹெக்செனாயிக் அமிலம்) இது மூளையின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. இது அல்சைமர் மற்றும் பார்கின்சன் நோயின் அபாயத்தையும் குறைக்கிறது.
இரத்த அழுத்தம்
கெளுத்தி மீனில் குறைந்த சோடியம் அளவு உள்ளது. கெளுத்தி மீனின் 100 கிராம் இறைச்சியில் 48 மி.கி. சோடியம் மட்டுமே உள்ளது. உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுபவர்கள் கெளுத்தி மீனைத் தவறாமல் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
நீண்ட ஆயுளுக்கு வழிவகுக்கும்
உடலில் ஒமேகா 3 கொழுப்புகள் அதிக அளவில் உள்ளவர்கள், குறைந்த அளவு ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களைக் கொண்டவர்களை விட 2.2 ஆண்டுகள் நீண்ட காலம் வாழ்ந்ததாக ஆராய்ச்சிகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
பக்கவாதம், மாரடைப்பு
கெளுத்தி மீனில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன மற்றும் பக்கவாதம், மாரடைப்பு மற்றும் மூளை பாதிப்புக்கான உங்கள் ஆபத்தை கணிசமாகக் குறைக்கும்.
முக்கிய கனிமங்கள் நிறைந்தது
கெளுத்தி மீனில் துத்தநாகம் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. துத்தநாகம் மற்றும் பொட்டாசியம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், காயமடைந்த திசுக்களை குணப்படுத்தவும், உடலில் எலக்ட்ரோலைட் சமநிலையை சீராக்கவும் உதவுகின்றன.