டுவிட்டர் CEO பராக் அகர்வாலின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
அமெரிக்காவின் முன்னணி நிறுவனமான டுவிட்டரில் இந்தியர் பராக் அகர்வால் (Parag Agrawal) நியமிக்கப்பட்டுள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மேலும், உலகின் மிகப்பெரிய சமூக வலைத்தள நிறுவனங்களில் ஒன்றான டுவிட்டர் CEO பதவியில் இருந்து அதன் நிறுவனர் ஜாக் டோர்சி (Jack Dorsey) வெளியேறிய நிலையில் இந்தியரான பராக் அகர்வால் (Parag Agrawal) புதிய சிஇஓ -வாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, அமெரிக்காவின் முன்னணி நிறுவனத்தில் மேலும் ஒரு இந்தியர் தலைமை பதவியைப் பெற்றுள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்தியாவில் இருக்கும் முன்னணி ஐடி சேவை நிறுவனத்திலேயே சிஇஓ-க்கள் பல கோடி ரூபாய்ச் சம்பளமாகப் பெறுகின்றனர்.
இந்த நிலையில் பராக் அகர்வாலின் CEO பதவிக்குக் கிடைக்கும் சம்பள விபரம் தற்போது வெளியாகியுள்ளது. டுவிட்டர் நிறுவனத்தின் CEO பதவியில் அமர்ந்துள்ள பராக் அகர்வால் தனது வருடாந்திர சம்பளமாக 1 மில்லியன் டாலர் ( இலங்கையில் மதிப்பில் ரூ.20. 2 கோடி) தொகையைப் பெற உள்ளார். இதேபோல் 12.5 மில்லியன் டாலர் மதிப்பிலான நிறுவனப் பங்குகளை 4 வருடங்களுக்கு பெற உள்ளார்.