காற்பந்துப் போட்டிக்கு கத்தார் எவ்வளவு செலவு செய்துள்ளது தெரியுமா? தலைசுற்றவைக்கும் தகவல்!
இதுவரை காணாத அளவில் உலகக் கிண்ணக் காற்பந்து போட்டி தொடர்பான ஏற்பாடுகளுக்கு கத்தார் செலவழித்துள்ள பணம் தலைசுற்றவைத்துள்ளது.
அதுபற்றிய சில சுவாரஸ்யத் தகவல்களைத் Forbes திரட்டி வெளியிட்டுள்ளது.
6 ஆண்டுகளுக்கு முன்பு கத்தார் எடுத்த முடிவு
6 ஆண்டுகளுக்கு முன்பு கத்தார் 2022ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணப் போட்டிகளை ஏற்றுநடத்தும் என்று முடிவுசெய்யப்பட்டதாக கூறப்படுகின்றது
2017ஆம் ஆண்டில் கத்தாரின் நிதியமைச்சர், அந்நாடு உலகக் கிண்ணத்தை ஏற்றுநடத்துவதற்கான ஏற்பாடுகளின் தொடர்பில் வாரத்துக்கு 500 மில்லியன் டாலர் செலவழிப்பதாகச் சொன்னார்.
$42 மில்லியன்: போட்டியை வெல்லும் நாட்டின் அணிக்கு
$128 மில்லியன்: ஆக அதிகச் சம்பளம் பெறும் உலகக் கிண்ண விளையாட்டாளரின் சம்பளம் - பிரான்ஸின் கைலியான் இம்பாப்பே (Kylian Mbappe)
$209 மில்லியன்: உலகக் கிண்ணத்தில் போட்டியிடும் விளையாட்டாளர்களை உருவாக்கிப் பயிற்சியளித்ததற்கு உலகிலுள்ள காற்பந்தாட்ட அமைப்புகள் பெறும் மொத்தத் தொகை
$277 மில்லியன்: இவ்வாண்டு உலகக் கிண்ணப் போட்டியின் பிரதிநிதியாகப் பணியாற்றுவதற்குக் காற்பந்தாட்டப் பிரபலம் டேவிட் பெக்கமுக்கு அளிக்கப்படும் பணம்
$440 மில்லியன்: இவ்வாண்டு உலகக் கிண்ணப் போட்டியின் மொத்தப் பரிசுத் தொகை
$1.7 பில்லியன்: இவ்வாண்டு உலகக் கிண்ணப் போட்டிகளை நடத்த FIFA வழங்கும் பணம் (இதில் பரிசுத் தொகை, தளவாடச் செயல்பாடுகள் முதலியவை அடங்கும்)
$4.7 பில்லியன்: இவ்வாண்டின் உலகக் கிண்ணப் போட்டிக்கான வருமான முன்னுரைப்பு - FIFAஇன் கணிப்புப்படி...
$6.5-10 பில்லியன்: கத்தார் உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான விளையாட்டரங்குகளைக் கட்டுவதற்குச் செலவழிக்கப்பட்டது
$14.2 பில்லியன்: ரஷ்யா 2018ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டிக்குச் செலவழித்த மொத்தத் தொகை
$220 பில்லியன்: கத்தார் போட்டியை ஏற்றுநடத்தத் தேர்ந்தெடுக்கப்படுமா என்று உறுதியாகத் தெரியாத நிலையிலிருந்தே 10 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து உலகக் கிண்ணப் போட்டிக்கான தயாரிப்புக்குச் செலவழிக்கப்பட்ட பணம் என கூறப்படுகின்றது.