சப்போட்டா பழத்தில் உள்ள நன்மைகள் பற்றி தெரியுமா
சப்போட்டா பழம் இனிப்புச் சுவையுடன் இருப்பதோடு ஏராளமான சத்துக்களையும் உள்ளடக்கிய சத்தான பழம் என கூறப்படுகிறது.
சப்போட்டாவில் உள்ள சத்துக்கள்
சப்போட்டாவில் மாம்பழத்தைப் போன்றே கலோரிகள் அதிகம் உள்ளன. அதே சமயம் இதில் நார்ச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் அதிகளவில் நிறைந்துள்ளன.
இதில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி போன்ற சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சத்துக்கள் உள்ளன.
இந்த பழத்தில் டானின் போன்ற சக்தி வாய்ந்த பாலிஃபீனால்கள் உள்ளன. அதோடு பொட்டாசியம், சோடியம், காப்பர், இரும்புச்சத்து, மக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற அத்தியாவசிய சத்துக்களும் நிறைந்துள்ளன.
நோயெதிர்ப்பு சக்தி மேம்படும்
சப்போட்டாவில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இவை நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன.
முக்கியமாக இதில் உள்ள பாலிஃபீனால்கள் உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை நீக்கி, நோய்களின் அபாயத்தைக் குறைக்கின்றன.
இப்பழத்தில் ஆன்டி-பாக்டிரியல் மற்றும் ஆன்டி-வைரல் பண்புகள் இருப்பதால் உடலில் உள்ள கிருமிகளை அழித்து, உடலுக்கு பாதுகாப்பளிக்கின்றன.
எனவே நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையாக இருக்க வேண்டுமானால் தினமும் ஒரு சப்போட்டா சாப்பிடுங்கள்.
சரும ஆரோக்கியம் மேம்படும்
சப்போட்டாவில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் டயட்டரி நார்ச்சத்துக்கள் போன்ற சரும ஆரோக்கியத்திற்கு வேண்டிய சத்துக்கள் அனைத்தும் உள்ளன.
முக்கியமாக இதில் சருமத்திற்கு ஈரப்பதமூட்டும் வைட்டமின் ஈ அதிகமாக உள்ளது மற்றும் இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் சருமம் வயதாவதைத் தடுத்து, சருமத்தின் இளமையை நீட்டிக்கும்.
கர்ப்பிணிகளுக்கு நல்லது
சப்போட்டாவில் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்ச்ததுக்கள் அதிகமாக உள்ளன.
எனவே கர்ப்பிணிப் பெண்கள் இப்பழத்தை தினமும் உட்கொண்டு வந்தால் கர்ப்ப காலத்தில் சந்திக்கும் உடல் சோர்வு குறைவதோடு, குமட்டல், தலைச்சுற்றல் போன்ற கர்ப்ப கால அறிகுறிகளைக் குறைக்க உதவி புரியும்.
இரத்த அழுத்தம் கட்டுப்படும்
சப்போட்டா பழத்தில் மக்னீசியம் உள்ளன. இவை இரத்த நாளங்களை ரிலாக்ஸாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
அதோடு இப்பழத்தில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த ஓட்டத்தை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது.
எனவே உயர் இரத்த அழுத்த பிரச்சனையைக் கொண்டவர்கள் சப்போட்டாவை உட்கொண்டு வந்தால், இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும்.
ஆற்றல் அதிகரிக்கும்
சப்போட்டாவில் க்ளுக்கோஸ் மற்றும் கலோரிகள் அதிகமாக உள்ளன. இவை இரண்டும் உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்குகின்றன.
எனவே உடற்பயிற்சி செய்பவர்கள் மற்றும் மிகுந்த உடல் சோர்வை சந்திப்பவர்கள், சப்போட்டா பழத்தை தினமும் உட்கொண்டு வந்தால், உடனடி ஆற்றல் உடலுக்கு கிடைக்கும்.