உங்களுக்கு இந்த அறிகுறிகள் எல்லாம் இருக்கா? பொட்டாசியம் நிறைந்த உணவுகளை உண்ணுங்கள்
பொட்டாசியம் அளவு உடலில் நீர் சமநிலை மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் தேவைப்படுகின்றன.
பொட்டாசியம் அளவு உடலில் நீர் சமநிலை மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.
பொட்டாசியம் குறைவதற்கான அறிகுறிகள்
அடிக்கடி சிறுநீர்
கழித்தல் அடிக்கடி சிறுநீர் கழிப்பது பொட்டாசியம் குறைபாட்டின் அறிகுறியாக இருக்கலாம்.
இதனுடன், எப்போதும் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உந்துதல் இருந்தாலும், உடலில் பொட்டாசியம் குறைந்திருக்கிறது என்று புரிந்துக் கொள்ளலாம்.
செரிமான பிரச்சனை
செரிமான செயல்முறை சரியாக இல்லை என்றால், அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். பல சமயங்களில் இது உணவுப் பழக்கவழக்கங்களால் ஏற்படுகிறது.
நீண்ட காலமாக செரிமானப் பிரச்சனைகள் இருந்தால், அது உடலில் பொட்டாசியம் குறைந்ததற்கான அறிகுறியாக இருக்கலாம்.
தசை பிடிப்பு
தசைப்பிடிப்பு என்பது தசைகளின் திடீர் மற்றும் கட்டுப்பாடற்ற சுருக்கம். இரத்தத்தில் பொட்டாசியம் அளவு குறைவாக இருக்கும்போது இது நிகழ்கிறது.
மரத்துப்போகும் உணர்வு பொதுவாக, சில பகுதிகளில் இரத்த ஓட்டம் தடைபடுவதால், உடல் மரத்துப் போகிறது. காரணமே இல்லாமல் கை, கால்களில் மரத்துப் போன உணர்வு ஏற்பட்டால், அது உடலில் பொட்டாசியம் குறைபாட்டின் அறிகுறியாகும்.
மன அழுத்தம்
மூளையை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் பொட்டாசியம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
குழப்பம், திடீர் மனச்சோர்வு, மனநிலை மாற்றங்கள் தினமும் நடந்தால், உடலில் பொட்டாசியம் குறைபாடு உள்ளது என்பதற்கு இது போதுமான அறிகுறியாகும்.
ஆனால் பொட்டாசியம் குறைபாட்டை அன்றாட வாழ்வில் இந்த ஐந்து விஷயங்களைச் சேர்ப்பதன் மூலம் மீட்டெடுக்க முடியும். அவற்றில் கீரை, அவகேடோ பழம், இளநீர், வாழைப்பழம், பூசணி விதைகள் ஆகியவை முக்கியமானவைகள் ஆகும்.