மே 19 ஆம் திகதி அபூர்வ அமாவாசை அன்று இதை செய்யுங்கள்
அமாவாசை அன்று சைவ உணவுகளை சமைத்து முன்னோர்களுக்கு படைத்து வழிபடுவார்கள். அதே போன்று மே மாதம் 19 ஆம் திகதி அன்று ஜயேஷ்ட அமாவாசை வருகின்றது.
அதிஷ்டத்தை தரும் ஜயேஷ்ட அமாவாசை!
பொதுவாக இந்து மதத்தில் அமாவாசைக்கு தனி சிறப்புண்டு.
அதே போல மே 19 ஆம் திகதி வரும் அமாவாசையில் சனி ஜெயந்தியும், சாவித்ரி விரதமும் சேர்ந்து வருகின்றது.
இதனால் இந்த நல்ல நாளில் விரதம் இருந்தால் முன்னோர்களின் ஆசிர்வாதமும், சனி பகவான், விஷ்ணு சங்கரர் ஆகியோரின் ஆசியும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
சாவித்ரி விரதம்
அத்தோடு திருமணமான பெண்கள் சாவித்ரி விரதத்தை கடைபிடித்து வந்தால் நல்ல பலன்கள் கிடைப்பதாக கூறப்படுகிறது.
அதேபோன்று ஜயேஷ்ட அமாவாசை அன்று நீராடுவது, தானம் செய்வது, விரதம் இருப்பது, ஆலமரத்தை வழிபடுவது போன்றவற்றை செய்தால் நல்ல பலன்கள் கிடைப்பதாக கூறப்படுகிறது.
ஜயேஷ்ட அமாவாசை அன்று புண்ணிய நதிகளில் நீராடினால் 7 பிறவிகளின் நாம் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்குவதாகவும், தர்ப்பணம் செய்வதால் முன்னோர்கள் மகிழ்ச்சி அடைந்து அவர்களுடைய ஆசிர்வாதம் பரிபூரணமாக கிடைப்பதாகவும் கூறப்படுகிறது.
செய்ய வேண்டியவை
ஜயேஷ்ட அமாவாசை அன்று புண்ணிய நதி, நீர்த்தேக்கம் அல்லது குளத்தில் நீராடுவதால் பாவங்கள் நீங்கும்.
அமாவாசை அன்று நீரில் கறுப்பு எல்லை விடுதல்
தர்ப்பணம் கொடுத்து ஏழைகளுக்கு அன்னதானம் வழங்குதல்
திருமணமான பெண்கள் கணவரின் நீண்ட ஆயுளை வேண்டி யம தேவதையை வழிபடுதல்
சனி ஜெயந்தி அன்று கடுகு எண்ணெய், கறுப்பு எள், கறுப்பு ஆடைகள் மற்றும் நீல் நிற மலர்கள் வைத்து பூஜை செய்தல் வேண்டும்.