உங்கள் பிள்ளைகள் படிப்பில் கவனக்குறைவா ? அப்போ இதை செய்யுங்கள்
பெற்றோர்களின் மிகப்பெரிய கவலையே பிள்ளைகள் படிப்பில் கவனக்குறைவாக இருப்பது.
இப்படி பாடுபட்டு படிக்க வைத்தாலும் எல்லா பிள்ளைகளும் படிப்பில் ஆர்வமுடன் இருப்பதில்லை. அப்படியான குழந்தைகள் இந்த தீபத்தை ஏற்றி வரும் போது படிப்பில் ஆர்வம் ஏற்பட்டு நன்றாக படிப்பார்கள் என்று கூறப்படுகிறது.
நல்ல முறையில் படிக்க
குழந்தைகள் நல்ல முறையில் படிக்க அவர்களுக்கான சூழ்நிலை சரியான முறையில் அமைய வேண்டும். அவர்களின் படிப்பில் பெற்றோர்களும் கவனம் கொண்டு கண்காணிக்க வேண்டும்.
ஒரு சில குழந்தைகள் படிக்கும் போது நன்றாக தான் படிப்பார்கள் ஆனால் தேர்வு எழுதும் போதும் கேள்வி கேட்கும் போதும் அனைத்தையும் மறந்து விடுவார்கள்.
தீபத்தை ஏற்படுத்துதல்
இப்படியான குழந்தைகள் கூட நன்றாக படித்து தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெற இந்த தீபத்தை விநாயகருக்கு ஏற்றி வரும் போது படிப்பில் சிறந்து விளங்குவார்கள் என்று சொல்லப்படுகிறது.
எவ்வாறு ஏற்ற வேண்டும்
இந்த தீபத்தை செவ்வாய், புதன் இரண்டு நாட்களில் மட்டும் ஏற்ற தான். இந்த இரண்டு நாட்களுமே விநாயகருக்கு உகந்த நாட்கள்.எனவே இந்த நாட்களிலே ஏற்றினால் தான் மிகவும் விஷேசம். இந்த தீபத்தை 21 நாட்கள் தொடர்ந்து ஏற்ற வேண்டும்.
இந்த தீபம் ஏற்ற ஒரு தாம்பாள தட்டு, இரண்டு அச்சு வெல்லம், பூத்திரி, மஞ்சள், குங்குமம், பூ, வெற்றிலை, அருகம்புல் விநாயகர் படம் அல்லது விக்ரகம் சிலை எதுவாக இருந்தாலும் அதை எடுத்துக் கொள்ளலாம்.
இந்த பூஜையை காலையில் தான் செய்ய வேண்டும். காலையில் குளித்தவுடன் பூஜை அறையில் தாம்பாள தட்டிற்கு மஞ்சள், குங்குமம் பொட்டு வைத்த பிறகு விநாயகர் படத்திற்கு அல்லது சிலைக்கு மஞ்சள், குங்குமம் பொட்டு வைத்து, தாம்பாளத் தட்டின் மேல் வெற்றிலையை பரப்பி வைத்து விடுங்கள்.
விக்ரகங்களாக இருந்தால் தட்டில் உள்ளே வெற்றிலை மேலே வைத்து விடலாம். படமாக இருந்தால் தட்டில் வைக்க முடியாது. விநாயகர் படத்தின் அடியில் வெற்றிலையை வைத்து விடுங்கள்.
தட்டில் மீது வைக்க வேண்டியவை
விநாயகருக்கு பூ, அருகம்புல் வைத்து அலங்காரம் செய்த பிறகு இரண்டு அச்சு வெல்லத்தை தட்டில் இருக்கும் வெற்றிலை மீது வைத்து விடுங்கள்.
அச்சு வெல்லத்தின் மேலே குழி போல இருக்கும் அதில் பூத்திரி வைத்து தீபம் ஏற்ற வேண்டும். இந்த பூத்திரியை தீபம் ஏற்ற ஒரு பத்து நிமிடம் முன்பு நெய்யில் ஊற வைத்தால் திரி நெய்யை உறிந்து கொள்ளும்.
வெல்லத்தின் மீது வைத்து ஏற்றும் போது சிறிது நேரம் நின்று நிதானமாக எரியும்.விளக்கு ஏற்றிய பிறகு ஏதாவது உலர் பழங்களை நெய்வேத்தியமாக படைத்து ஊதுபத்தி, கற்பூரம் காட்டி விநாயகரிடம் நல்ல புத்தி கூர்மையும், படிப்பையும் தரும்படி கேட்டு தலையில் கொட்டி தோப்புக்கரணம் போட்டு வணங்க வேண்டும்.
குறைந்தது 11 தோப்புக்கரணம் போட வேண்டும்.இதை செய்த பிறகு அந்த வெல்லத்தையும் உலர் திராட்சையும் பிரசாதமாக சாப்பிட கொடுங்கள்.
யார் ஏற்ற வேண்டும்
இந்த தீபத்தை பிள்ளைகள் தான் ஏற்ற வேண்டும். தீபத்தை ஏற்றி அவர்கள் இந்த தோப்புக் கரணம் போட்டு வழிபடும் போது அவர்கள் படிப்பது மனதில் பதிந்து அவர்களுக்கு புத்தி கூர்மை, ஞாபக சக்தி அதிகரித்து அவர்களுக்கு படிக்கும் ஆற்றல் அதிகரிக்க விநாயகரின் பரிபூரணமான ஆசீர்வாதமும் அருளும் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.
இந்த தீபத்தை இப்போது ஏற்றத் தொடங்கினால் 21 நாட்கள் முடிந்து வரும் தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெற இந்த தீப முறை வழி செய்யும்.
நம்பிக்கை உடையவர்கள் நம்பிக்கையுடன் இந்த வழிபாடை செய்து நல்ல பலனை பெறுங்கள்.