நீங்கள் மிகவும் துரதிஷ்டசாலியாக இருக்கின்றீர்களா இதனை செய்யுங்கள்
சிலரின் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் என்பதே இருக்காது மிகவும் துரதிஷ்டசாலியாக வாழ்பவர்களை பார்த்தால் தரித்திரம் பிடித்தவன், பீடை பிடித்தவன் என்று திட்டுவது நம் வழக்கத்தில் உண்டு.
குறிப்பாக பெண்களை இந்த வார்த்தையை சொல்லி அதிகமாக திட்டுவார்கள்.அதாவது அடுத்த வீட்டிற்கு வாழ போக கூடிய பெண்ணுக்கு இப்படிப்பட்ட துரதிஷ்டசாலி, அதிர்ஷ்டம் கெட்டவள் என்ற பெயர் மிக எளிமையாக கிடைக்கும்.
நேரமும் காலமும் எதிர்மறையாக செயல்படுவதன் மூலம் ஏற்படக்கூடிய எதிர்மறையான விடயங்களுக்கு எல்லாம் ஒரு அப்பாவி பெண்ணின் மேல் பழியும் சுமையும் வந்துவிடும்.
வீண் பலி சுமத்துதல்
யாரும் யாரையும் அதிர்ஷ்டம் கெட்டவர்கள் என்று சொல்லிவிட முடியாது. யாரும் யாரையும் அதிர்ஷ்டசாலிகள் என்றும் சொல்லி விட முடியாது. இன்னும் சொல்லப்போனால் அதிர்ஷ்டம் என்ற ஒன்று இந்த உலகத்தில் இல்லவே இல்லை என்று கூட சொல்லலாம்.
அவன் அவனுடைய கர்ம வினைக்கு ஏற்ப அவன் அவனுடைய வாழ்க்கை அமைகின்றது. நாளைக்கு உனக்கு ஒரு நல்லது நடக்கப் போகிறது என்றால் நேற்று நீ செய்த நல்லது காண பரிசு தான் அது.
இன்று உனக்கு தீமை நடக்கிறது என்றால் நேற்று நீ செய்த தீமைக்காக கடவுள் கொடுக்கப்பட்ட தண்டனை தான் இது. இப்படி ஒன்றோடு ஒன்று தொடர்புடையது தான். ஆகவே யாரும் யாரையும் மனது நோகும்படி பேசக்கூடாது.
யார் மனதும் புண்படாத படி நடந்து கொள்வது நன்மை தரக்கூடிய விஷயம்தான்.
பரிகாரம்
தரித்திரம் விலக பரிகாரம்
முன் ஜென்ம வினையால், கர்ம வினையால், அல்லது இந்த ஜென்மத்தில் செய்த தவறால் உங்களுக்கு தரித்திரம் பிடித்திருந்தாலும் சரி அல்லது பிறந்ததிலிருந்தே உங்களுடன் இந்த தரித்திரம் ஒட்டிக் கொண்டிருந்தாலும் சரி அதை சுலபமாக விரட்டி அடிக்கலாம்.
செய்யும் முறை
சிவன் கோவிலுக்கு செல்லும்போது ஏதாவது ஒரு ருத்ராட்சத்தை எடுத்துச் செல்ல வேண்டும். எத்தனை முக ருத்ராட்சம் கிடைத்தாலும் சரி. கோவிலில் இருக்கும் வில்வம் மரத்திலிருந்து ஒரு இலையை பறித்துக் கொள்ளுங்கள்.
குருக்கள் அனுமதியோடு அந்த வில்வ இலை பறிக்கப்பட வேண்டும். அந்த வில்வ இலைக்கு நடுவே ஒரு ருத்ராட்சத்தை வைத்து மடித்து வலது உள்ளங்கையில் வைத்துக் கொள்ளுங்கள்.
சிவன் கோவிலிலேயே சமணம் போட்டு அமர்ந்து மனதை ஒருநிலைப்படுத்தி பிடித்த துரதிஷ்டம் தரித்திரம் எல்லாம் விலக வேண்டும் என்று எம்பெருமானை வேண்டி மனதார பிரார்த்தனை செய்யுங்கள்.
மந்திரம்
அதன் பின்பு மனதை ஒருநிலைப்படுத்தி எம்பெருமானின் மந்திரத்தை சொல்லலாம் ஓம் நமசிவாய ‘சிவாய நம’, சிவ சிவ, ஓம் இப்படி உங்கள் விருப்பம் போல எம்பெருமானின் நாமத்தை உச்சரியுங்கள். மனதை அமைதிப்படுத்திக் கொண்டு இந்த தியானத்தை மேற்கொள்ள வேண்டும்.
பத்து நிமிடங்கள் இப்படி அமர்ந்தால் கூட போதும்.ஆனால் உங்களுடைய வேண்டுதலில் எந்த ஒரு சந்தேகமும் இருக்கக் கூடாது.
இப்படி செய்தால் நம் தரித்திரம் நம்மை விட்டு விலகிவிடுமா என்ற கேள்வி எல்லாம் இருக்கக்கூடாது. தியானத்தை முடித்துவிட்டு கையில் இருக்கும் வில்வ இலையையும் ருத்ராட்சத்தையும் வீட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
வில்வ இலையையும் ருத்ராட்சத்தையும் அப்படியே பூஜை அறையில் வைத்துக் கொள்ளுங்கள். வில்வ இலை காய்ந்தாலும் அதற்கு இருக்கும் மகத்துவம் நீங்காது.
ருத்ராட்சத்தின் மகிமை
ருத்ராட்சத்தின் மகிமை என்றைக்குமே மாறாது. ஆக இந்த இரண்டு பொருட்களும் உங்கள் வீட்டு பூஜை அறையில் இருக்கும். தினமும் காலையில் எழுந்து குளித்துவிட்டு ருத்ராட்சம் வில்வ இலையை வணங்கி விட்டு நெற்றியில் நீர் பூசிக்கொண்டு அன்றாட தினசரி வேலையை தொடங்கினால் உங்களுடன் தரித்திரம் ஒட்டிக்கொண்டு வராது.
இந்த பரிகாரத்தை செய்ய தொடங்கிய ஒரு சில நாட்களிலேயே உங்களுடைய வாழ்க்கையில் நம்ப முடியாத நிறைய நல்ல மாற்றங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது என்று கூறப்படுகிறது.