இனி பறக்க கூடாது; வந்தது அதிரடி உத்தரவு!
“சக்குராய்” விமான நிறுவனத்துக்குச் சொந்தமான அனைத்து விமான சேவைகளும் உடன் அமுலுக்குவரும் வகையில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கான தீர்மானம் சிவில் விமான சேவைகள் அதிகார சபையால் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் மறுஅறிவித்தல் பிறப்பிக்கப்படும் வரை, குறித்த நிறுவனத்திற்கு சொந்தமான அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்படுகிறது என, விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் டி.வி. ஷானக தெரிவிக்கின்றார்.
சக்குராய் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான இரண்டாவது இலகுரக விமானமும் இன்று (27) விமானத்தில் ஏற்பட்ட கோளாறினால் விபத்துக்குள்ளான நிலையிலேயே, இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இதேவேளை சக்குராய் விமான நிறுவனத்திற்கு சொந்தமான இலகுரக விமானமொன்று கடந்த 22 ஆம் திகதி பயாகல கடற்கரையோரத்திலும் இன்றையதினம் நீர்கொழும்பு பகுதியிலும் அவசரமாக தரையிறக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி
இலங்கையில் அவசரமாக தரையிறக்கப்பட விமானம்; மூவருக்கு நேர்ந்த கதி!