அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய வினோதமான திருமண சம்பிரதாயம்!
போர்னியோ என்ற தீவில் வாழும் மக்கள் திருமணத்திற்கு முன் ஒரு வினோதமான சம்பிரதாயத்தை கடைபிடித்து வருவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
குறித்த தீவில் மணமகனும், மணமகளும் திருமணம் ஆவதற்கு மூன்று நாட்களிற்கு முன்னர் இருந்து மலம் கழிக்காமல் இருக்க வேண்டும் என்பது அவர்களுடைய சடங்காக காணப்படுகின்றது.
இது வேடிக்கைக்குரியதாக இருப்பினும் இன்று வரை அங்குள்ள மக்களால் இது பின்பற்றப்பட்டு வருகின்றது.
இதனால், 3 நாட்களிற்கு மலம் கழிக்க கூடாது என்பதற்காக தொடர்ந்து மூன்று நாட்களும் மணமகனும், மணமகளும் திரவ வகையான உணவுகளையே உட்கொள்வர்களாம்.
அவ்வாறு இவர்கள் மலம் கழித்தால் திருமணத்திற்குரிய ஒரு விரதம் முடிந்து விடும் என்ற மூட நம்பிக்கையினை கொண்டுள்ளதால் திருமணம் முடியும் வரை மலம் கழிக்காதிருந்து திருமணம் முடிந்த பிறகே மலம் கழிப்பார்கள் என கூறப்படுகின்றது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.