படுத்திருக்கும் நாயை தாண்டவே கூடாது; அது ஏன் தெரியுமா?
பொதுவாக எந்த உயிரினத்தையுமே நாம் தாண்டி செல்ல கூடாது என பெரியோர்கள் சொல்வார்கள். அதிலேயும் குறிப்பாக நாயை தாண்டவே கூடாது என கூறுவார்கள். ஏனெனில் நாய் பிடிப்பவர் வந்தால், அவைகள் மோப்பச் சக்தி மூலம் உணர்ந்து தப்பி ஓடிவிடுகின்றன.
ஒருவர் அதனை தாண்டும் போது ஆபத்து வந்துவிட்டது என்று உணரும் நாய்களுக்கு, மோப்ப உணர்வு தான் வருமே தவிர, பழகியவர் என்ற எண்ணமே வராது. தெரியாமல் காலை கவ்விவிடவும் வாய்ப்பு உண்டு.
எனவேதான் எந்த உயிரினத்தை தாண்டினாலும், அந்த உயிரினத்தின் உள்ளுணர்வானது முதலில் தன்னை தாக்க வருவதாகத்தான் எண்ணும். அதனால் அவைகள் , தாண்டுபவர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இது தவிர படுத்திருக்கும் நாயை தாண்டக் கூடாது என்பதற்கு ஆன்மீக காரணமும் உண்டு. அதாவது நாய் பைரவரின் வாகனம். எனவே அதனை தாண்டுவது என்பது கடவுளை அவமதிக்கும் செயல் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.
அது படுத்திருக்கும் போது, அவசரமாக வேகமாக வந்து தாண்டி செல்ல முயன்றால், அந்த நேரம் பார்த்து அது பயத்தில் எழுந்து நிற்க முற்படும். அது தெரியாமல், நாம் தாண்டும் போது இடறி வேகமாக கீழே விழ நேரிடும்.
அதனால் தான் நம் முன்னோகள் படுத்திருக்கும் நாயை தாண்ட கூடாது என சொல்லி வைத்துள்ளனர்.