வெற்றி கொண்டாட்டத்தில் திமுக தொண்டர்கள்
தமிழகத்தில் தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டுள்ள நிலையில் திமுக தொண்டர்கள் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுவருவதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகம், அசாம், மேற்கு வங்காளம், கேரளா மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்துள்ளது.
இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தற்போதைய நிலவரப்படி திமுக முன்னணியில் இருப்பதைக் காண முடிகிறது.
எனினும் தொடர்ந்து இன்னும் பல தொகுதிகளில் திமுக குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் இருக்கின்ற நிலையில், இறுதியான முடிவுகளைப் பொறுத்தே யார் முழுமையான வெற்றி பெறுவார்கள் என அதிகாரப்பூர்வமாக தெரிந்துகொள்ள முடியும்.
இந்நிலையில், அண்ணா அறிவாலயத்தில் குவிந்த திமுக தொண்டர்கள் திமுக வெற்றியை ஆரவாரமாக கொண்டாட தொடங்கியுள்ளதாக தமிழக் தகவல்கள் தெரிவிக்கின்றன .