தென்னிலங்கையில் சிறுமி உட்பட 7 பேரின் உயிரை பறித்த விபத்தின் பரபரப்பு வீடியோ!
பதுளை - தியத்தலாவை பகுதியில் இடம்பெற்ற மோட்டார் பந்தய போட்டியின் போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தில் சிறுமியொருவர் உட்பட 07 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
பந்தயத்தின் போது கார் ஒன்று பந்தய திடலை விட்டு விலகி பார்வையாளர்கள் மீது மோதியதில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, குறித்த விபத்தில் காயமடைந்த 20 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், விபத்தில் உயிரிழந்த 07 பேரில் 4 பந்தய உதவியாளர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தினையடுத்து நடைபெறவிருந்த எஞ்சிய அனைத்து பந்தய போட்டிகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தியத்தலாவை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
The Fox Hill Super Cross 2024 accident death toll has risen to 7.
— Sri Lanka Tweet ?? (@SriLankaTweet) April 21, 2024
The rest of the races at the event have been cancelled.
?Sensitive Video ?pic.twitter.com/ApkEd1KGFV#LKA #SriLanka #FoxHill #Diyathalawa According to sources, after one car crashes, spectators rushing in…