மாணவனிடம் ஆசிரியை செய்த இழிவான செயல்
பாடசாலையில் கல்வி கற்கும் 15 வயது மாணவனை பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியை ஒருவர் வன்கொடுமை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் ஹொரண கல்வி வளர்ச்சிக்குட்பட்ட பகுதியில் இடம் பெற்றுள்ளது.

சம்பவம்
குறித்த ஆசிரியை மாணவனின் வீட்டிற்கு சென்று அவனை முத்தமிட்டத்துடன் மேலதிக துஷ்ப்பிரயோக கொடுமை செய்துள்ளார்.
குறித்த பெண்ணை கைது செய்த பொலிஸார் அவரை ஹொரண நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி உள்ளனர்.
இதை அடுத்து இம்மாதம் 6 திகதி வரை ஆசிரியையை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.
பாதிக்கப்பட்ட மாணவனின் வகுப்பாசிரியையே இச்செயலை செய்துள்ளார் எனதெரிய வந்துள்ளது.
இவர் 42 வயதுடைய 3 பிள்ளைகளின் தாயாராவார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாதிப்புக்குள்ளான மாணவனின் பெற்றோர்கள் வெளிநாட்டில் உள்ளதாகவும் மாணவனின் தாயின் சகோதரியிடமே மாணவர் வளர்ந்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஐந்தாம் திகதி மாணவனின் சிறிய தாயார் (சித்தி) வீட்டிலிருந்து வெளியே சென்றிருந்த வேளையில், குறித்த ஆசிரியை மாணவனை தேடி வீட்டிற்கு வந்ததாகவும் மாணவன் வீட்டில் தனியாக இருந்ததாகவும், இச்சமயத்திலேயே குறித்த சம்பவம் நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.