சமிக்ஞை கோளாறால் ஏற்பட்ட விபரீதம்; விபத்துக்குள்ளான புகையிரதங்கள்
புகையிரத சேவையில் ஏற்பட்ட சமிக்ஞை கோளாறு காரணமாக ராகம மற்றும் பேரலந்த புகையிரத நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் இரண்டு புகையிரதங்கள் விபத்திற்குள்ளானதாக கூறப்படுகின்றது.
அத்துடன் சமிக்ஞை கோளாறு காரணமாக பிரதான பாதை உட்பட மூன்று வழித்தடங்களில் உள்ள அனைத்து அலுவலக ரயில்களும் ஒன்றரை மணிநேரம் தாமதமாக புறப்பட்டதாக ரயில்வே திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த விபத்தை அடுத்து ராகமவில் இருந்து கம்பஹா வரையான புகையிரதங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் தெமட்டகொட மற்றும் மருதானைக்கு இடையில் உள்ள சமிக்ஞை கேபிளில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த தாமதம் ஏற்பட்டுள்ளளதாகவும் கூறப்படும் நிலையில் அது தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.


