காலை நேரம் வெதுவெதுப்பான நீருடன் ஒரு ஸ்பூன்; பறந்துபோகும் நோய்கள்!
தேன் நம் உடலுக்கு பல நன்மைகள் செய்கிறது . தேன் வைத்தியம் பற்றி நமது சித்தர்கள் பல பாடல்களில் பாடியுள்ளனர் ,நம் முன்னோர்களும் பல நோய்களை விரட்ட தேனை பயன்படுத்தியுள்ளனர் .
இவ்வளவு சிறப்புகள் கொண்ட தேனை காலையில் வெறும் வயிற்றில் வெந்நீருடன் உட்கொண்டாலே பல நோய்கள் ஓடிவிடும் .
காலையில் வெறும் வயிற்றில் இதனை குடிப்பதால் சளி ,காய்ச்சல் .தொண்டை புண் ,வாயு தொல்லை போன்ற நோய்கள் ஓடிவிடும் .
அதுமட்டுமல்லாது தேன் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது .இது நம் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி ,நம்மை பாக்டீரியா தாக்குதலிலிருந்து பாதுகாக்கிறது .
வெதுவெதுப்பான நீரில் தேன்கலந்து குடிப்பதால் ஓடிப்போகும் நோய்கள்
1.வெதுவெதுப்பான நீருடன் தேனை கலந்து குடிப்பதற்கான சிறந்த நேரம் காலை வெறும் வயிறு என்று கூறுகின்றனர்
2.காலையில் வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடிப்பது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர் ,
3.வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடிப்பது எடை இழப்புக்கு உதவவும் என்பதுடன் , உடலை நீரேற்றமாக வைத்திருக்கவும் உதவுகிறது.
4.காலை நேரம் தவிர இரவில் தூங்கபோவதற்கு முன்னர் வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடிப்பது நல்லது.
5.இரவில் வெந்நீரில் தேன் கலந்து குடிப்பது தொண்டைக்கு இதமளிக்கவும், தூக்கத்தை ஊக்குவிக்கவும் உதவுகிறது.