இலங்கையில் கொரோனாவை தொடர்ந்து சிறுவர்களை தாக்கும் மற்றுமொருநோய்; விடுக்கப்பட்ட எச்சரிக்கை
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு பின்னர், சில சிறுவர்களுக்கு பல்வேறு உறுப்புகளை பாதிக்கும் மல்டிசிஸ்டம் அழற்சி நோய்க்குறி ஏற்படுவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்நோயினால் பாதிக்கப்பட்ட ஐந்து சிறுவர்கள் கொழும்பு லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
இத்தகவலை மருத்துவமனையின் குழந்தை தீவிர சிகிச்சை பிரிவின் ஊடகத் தலைவரான வைத்தியர். நளின் கிதுல்வத்தே தெரிவித்தார். இதேவேளை உறுப்புக்களை பாதிக்கும் இதே போன்ற நிலையில் பெரியவர்களும் பாதிக்கப்படலாம் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் தாய்க்கு கொரோனா தொற்று இருந்த நிலையில், புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு மல்டிசிஸ்டம் இன்ஃப்ளமேட்டரி சிண்ட்ரோம் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.