கொரோனாவை கண்டறிய புதிய தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்த சிங்கப்பூர் ஆய்வாளர்கள்!
சிங்கப்பூர் ஆய்வாளர்கள் சிலர், கொரோனா தொற்றை உமிழ்நீர் மாதிரியின் மூலம் மேலும் துரிதமாக அடையாளங்காண உதவும் புதிய தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்திருக்கின்றனர்.
டியூக்-என்யுஎஸ் மருத்துவப் பள்ளி, (Duke-NUS Medical School) சிங்கப்பூர்ப் பொது வைத்தியசாலையில், சிங்கப்பூர் தேசியப் புற்றுநோய் நிலையம் ஆகியவை இணைந்து புதிய Antigen விரைவுப் பரிசோதனையை உருவாக்கியுள்ளன. இந்த புதிய பரிசோதனை PASPORT என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது.
இந்நிலையில், ஒருவரின் உமிழ்நீர் பரிசோதிக்கப்படும். சில நிமிடங்களுக்குள் பரிசோதனை முடிவுகள் கிடைத்துவிடும். PASPORT தொழில்நுட்பம் பிசிஆர் பரிசோதனைக்கு நிகரானது என்றும் கட்டணம் மலிவாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இதனையடுத்து PASPORT பரிசோதனையை மேற்கொள்ள கூடுதல் சாதனங்களோ, சிறப்புப் பயிற்சி பெற்ற அதிகாரிகளின் உதவியோ தேவைப்படமாட்டாது.
சிங்கப்பூர் நிறுவனமான Digital Life Line உடன் இணைந்து புதிய கருவியைச் சந்தையில் அறிமுகப்படுத்துவதற்கான பணிகளில் Duke-NUSஉம் SingHealth குழுமமும் ஈடுபட்டுள்ளன.
அடுத்த 3 முதல் 6 மாதத்திற்குள் அது விற்பனைக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.