காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது? முல்லைத்தீவில் ஜனாதிபதி கூறியது
வடக்கு மக்களின் காணி உரிமைகள், மொழி மற்றும் கலாச்சார உரிமைகளை பாதுகாப்பதற்கும், காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது என்பதை அறியும் உரிமையை பாதுகாப்பதற்கும் அரசு அர்ப்பணிப்புடன் உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
உலக தெங்கு தின நிகழ்வுகளுடன் இணைந்த வகையில், “நாடே சுபீட்சம் – ஆக்கும் விருட்சம் – கற்பகத்தரு வளம் என்ற தொனிப்பொருளின் கீழ் இன்று (02) முல்லத்தீவு புதுக்குடியிருப்பில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்ற ஜனாதிபதி, அங்கு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கிற்கு மீண்டும் உயிரோட்டத்தை வழங்குவதன் மூலம் இந்த மக்களுக்கு வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் பொறுப்பை நிறைவேற்றுவேன்.
தேசிய ஒற்றுமையை உருவாக்குவதே எமது அரசின் நோக்கமாகும். அதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.