பிக் பாஸ் வீட்டிலிருக்கும் ராஜூவை வெளிநாட்டுக்கு அனுப்பிய டைரக்டர்
பிக் பாஸ் போட்டியாளரான ராஜூவை அவர் நடித்து வந்த சீரியலின் டைரக்டர் தனது சீரியல் கதாபாத்திரத்தின் வாயிலாக அவரை வெளி நாட்டுக்கு அனுப்பியுள்ளார்.
பிக் பாஸ் சீசன் 5வின் போட்டியாளரான ராஜு அவர்கள் தமிழ் தொலைக்காட்சி சீரியலான நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் கத்தி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இந்த நிலையில் அவர் தற்போது பிக் பாஸில் கலந்துகொண்டதன் காரணமாக சீரியலில் அவருக்கு பதிலாக புதிய கதாபாத்திரம் வருமோ என ரசிகர்கள் அஞ்சினர்.
ஆனால் அந்த சீரியலின் டைரக்டர் சீரியலில் ராஜு வெளிநாட்டிற்கு செல்வது போலவும் அதனை மாயன் கதாபாத்திரத்தின் வாயிலாகவும் தெரியப்படுத்தியுள்ளார்.
இதன் மூலம் பிக் பாஸ் வீட்டிலிருந்து ராஜு வெளியேறும் வரையில் அவரது கதாபாத்திரம் வெளிநாடு சென்றுள்ளதாக கூறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.