தினேஷ் ஷாப்டரின் சடலத்தை மேலதிக விசாரணைகளுக்காக தோண்டி எடுக்க தீர்மானம்
ஜனசக்தி காப்புறுதி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டரின் சடலத்தை மேலதிக விசாரணைகளுக்காக விசேட பொலிஸ் பாதுகாப்பில் தோண்டி எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை கொழும்பு மேலதிக நீதிவான் ரஜீந்திர ஜயசூரிய நேற்று வெள்ளிக்கிழமை (19) குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஐவரடங்கிய விசேட வைத்தியக் குழு, சடலத்தை மீட்கும்போது அங்கிருக்க வேண்டும் என்பதற்காக அவர்களின் பயண வசதிகள், தங்குமிட வசதிகள் மற்றும் உள்ளூர் நலன்கள் அனைத்தையும் மேற்கொள்ளுமாறும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு மற்றுமொரு உத்தரவை நீதிவான் பிறப்பித்துள்ளார்.
தினேஷ் ஷாஃப்டரின் மரணத்துக்கான காரணத்தை கண்டறிய அவரது உடலை தோண்டி எடுக்க வேண்டியது அவசியம் என 5 பேர் கொண்ட கொழும்பு சிறப்பு மருத்துவ சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.