நாடு முழுவதும் மின்வெட்டு காரணமாக டிஜிட்டல் கட்டண சேவைகள் பாதிப்பு
நாட்டில் எதிர்பாராத மின் தடை காரணமாக பல கட்டண மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனை சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக LankaPay அறிவித்துள்ளது.
இந்த இடையூறு வங்கிகளுக்கு இடையேயான ATM பரிவர்த்தனைகள் CEFTS, LPOPPஅரசாங்க கொடுப்பனவுகள் ,JustPay, LankaPay அட்டைகள் GovPay மற்றும் LANKAQR அமைப்புகள் மூலம் வங்கிகளுக்கு இடையேயான நிதி பரிமாற்றங்களை பாதித்துள்ளது.

LankaSign டிஜிட்டல் சான்றிதழ் ஆணையமும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
ஒரு அறிக்கையில், LankaPay தனது தொழில்நுட்பக் குழுக்கள் சேவைகளை விரைவில் மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், நுகர்வோர் மற்றும் பங்குதாரர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்துள்ளது.
அமைப்புகள் முழுமையாக செயல்பட்டவுடன் அதன் அதிகாரப்பூர்வ சேனல்கள் வழியாக மேலும் புதுப்பிப்புகள் வெளியிடப்படும் என்றும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.