உயர்தர வகுப்புக்களை ஆரம்பிப்பதில் சிக்கல்கள்
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் முன்னர் உயர்தர வகுப்புக்களை ஆரம்பிப்பதில் பல சிக்கல்கள் இருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் முன்னர் உயர்தர வகுப்புகளை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
பாடசாலைகளில் வளப்பற்றாக்குறை
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த முன்வைத்த யோசனைக்கு அமைய அமைச்சரவை இந்த அனுமதியை வழங்கியுள்ளது.
தற்போது கல்விப் பொதுத் தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான உயர்தர வகுப்புக்களை எதிர்வரும் 5ஆம் திகதி ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் கல்விப் பொதுத்தராதரம் வரை மட்டுமே கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் இப்பாடசாலை மாணவர்களை அருகில் உள்ள பாடசாலைகளுக்கு உயர்தரத்திற்கு அனுப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், பாடசாலைகளில் வளப்பற்றாக்குறை காணப்படுவதாக சுட்டிக்காட்டினார்.