டயட் கோக் குடிப்பவரா நீங்கள்; காத்திருக்கும் ஆபத்து!
பொதுவாக, குளிர்பானங்களில் அதிக சர்க்கரை மற்றும் அதிக கலோரிகள் இருக்கும். பாட்டில் சோடாக்கள், கோலா பானங்கள் ஆகியவற்றைக் கூறலாம்.
இதில் அதிகம் கலோரிகள் உள்ளதால், டயட் கோக், ஆர்டிபிஷியல் ஸ்வீட்டனர்ஸ் பயன்படுத்தலாம் எனபலரும் அதைப் பயன்படுத்துகிறார்கள்.
Aspartame செயற்கை இனிப்பூட்டி
எனினும் பலருக்கும் தெரியாத விடயம் ஒன்று உள்ளது அதாவது, உலகம் முழுவதும் பரவலாக பயன்படுத்தக்கூடிய Aspartame என்ற ஒரு செயற்கை இனிப்பூட்டி, சர்க்கரையை விட 200 மடங்கு இனிப்பு தன்மை கொண்டது.
இது பலரும் குடிக்கும் டயட் கோக்கில் கூட உள்ளது. சாதாரண சர்க்கரையை விட செயற்கை இனிப்பூட்டி உடலுக்கு மிகவும் ஆபத்தானது.
குறிப்பாக, இந்த ஸ்வீட்டனரில் கேன்சர் உண்டாக்கும் ஒரு காம்பவுண்டு இருக்கிறது என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது.
பொதுவாக, கேன்சர் உருவாக காரணமாக இருக்கும் காரணிகளை கார்சினோஜென் என்று கூறுவார்கள்.
உலக சுகாதார மையம், ஜூன் மாதம் 30 ஆம் தேதி அன்று, Aspartame என்ற ஸ்வீட்டனரை, கேன்சர் உண்டாக்கக் கூடிய கார்சினோஜென் ஆக இருக்கலாம் என்று அறிவித்துள்ளது.
200 மடங்கு அதிக இனிப்பு தன்மை
உலக சுகாதார மையத்தின் இந்த அறிக்கையானது உலகத்தையே ஸ்தம்பிக்க வைத்துள்ளது. அஸ்பார்டாமில் அப்படி என்ன இருக்கிறது? ஆஸ்பார்டாம் நாம் பயன்படுத்தும் சர்க்கரையை விட 200 மடங்கு அதிக இனிப்பு தன்மை கொண்டது என்று அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு தெரிவித்துள்ளது.
ஒரே ஒரு கிராம் அஸ்பர்டாம் பயன்படுத்தினால் கூட, 2 டீஸ்பூன் சர்க்கரை அளவுக்கு இனிப்பாக இருக்கும். ஒரு கிராம் சர்க்கரையில் 32 கலோரிகள் இருக்குமேயானால் ஒரு கிராம் அஸ்பர்டாமில் 40 கலோரிகள் இருக்கிறது.
WHO கூட்டு உணவு சேர்க்கைகள் நிபுணர் குழு
1981 ஆம் ஆண்டு WHO, உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் கூட்டு உணவு சேர்க்கைகள் நிபுணர் குழு அனுமதிக்கப்பட்ட அஸ்பார்டேமை உட்கொள்வது எந்த பிரச்னையையும் ஏற்படுத்தாது என்று கூறியுள்ளது.
ஆனால், இப்போது வரை, அந்த அளவீடு மற்றும் வரம்பு மாறவே இல்லை. இந்நிலையில் இதை மறுபரிசீலனை செய்து, ஜூலை 14 ஆம் தேதி மீண்டும் இதன் பயன்பாடு பற்றி அறிக்கை வெளியாக இருக்கிறது.
ஐரோப்பிய உணவு பாதுகாப்பு
இதற்கிடையே, ஐரோப்பிய உணவு பாதுகாப்பு மையத்தில், அஸ்பர்டேமை உட்கொள்வது மனிதர்களுக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாது என்றும், 100 நாடுகளுக்கும் மேல் செயற்கை ஸ்வ்வீட்டனராக பயன்படுத்தப்படுகிறது என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.
அதேசமயம் இந்திய உணவு பாதுகாப்புப் பிரிவைப் பொறுத்தவரை, இந்தியாவில் வரையறுக்கப்பட்ட அளவு வரை அஸ்பர்டேமை பயன்படுத்துவது எந்த விதமான ஆபத்தும் இல்லை.
சர்க்கரை இல்லாத இனிப்பு
இருப்பினும், சர்க்கரைக்கு பதிலாக, சர்க்கரை இல்லாத இனிப்புகளை பயன்படுத்துவது பெரிய அளவில் கலோரிகள் உட்கொள்வதில் எந்த மாற்றத்தையும் உண்டாக்கப் போவதில்லை.
மாறாக, வழக்கத்தை விட கூடுதலாக உணவை சாப்பிடலாம். தினசரி சர்க்கரைக்கு மாற்றாக, சர்க்கரை இல்லாத இனிப்புகள் உட்கொள்பவர்களுக்கு, டைப் 2 நீரிழிவு, கார்டியோ வாஸ்குலார் மற்றும் இணைநோய்கள் ஏற்படும் அபாயம் இருக்கிறதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.