இலங்கையை சென்றடைந்தது இந்தியா அனுப்பிய டீசல்
இலங்கைக்கு ரூ.7,600 கோடி கடனுதவி வழங்குவதாக இந்தியா அறிவிப்பு இதனிடையே, இந்தியா அறிவித்த கடன் வரம்பின் கீழ் 40,000 தொன் டீசல் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை கையாள்வதில் இலங்கை அரசாங்கம் இந்தியாவின் உதவியை நாடியுள்ளது. இலங்கையின் நிதியமைச்சர் பசில் ராஜபக்சே, இந்தியப் பயணத்தின்போது பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார்.
இதையடுத்து, இலங்கைக்கு இந்தியா ரூ.7,600 கோடி கடனாக அறிவித்தது. இதற்கிடையில், இந்தியா அறிவித்த கடன் வரம்பின் கீழ் 40,000 தொன் டீசல் இலங்கைக்கு அனுப்பப்பட்டது. கப்பல் இலங்கை துறைமுகத்தை வந்தடைந்தது. இந்தியா அனுப்பிய டீசல் இன்று இரவு இலங்கை முழுவதும் விநியோகிக்கப்படும் என தெரியவருகிறது. இலங்கையில் டீசல் கிடைக்காது என இரு தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது.
டீசல் இறக்குமதி செய்ய முடியாததால் டீசல் சப்ளை முற்றிலும் நிறுத்தப்பட்டது. பேருந்துகள், பாரவூர்திகள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.