புத்தாண்டில் ஜனாதிபதியின் மனைவி கொக்கிஸ் சுட்டதை பார்த்தீர்களா?
சிங்கள – தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி மனைவியின் பாரம்பரிய செயற்பாடுகள் தொடர்பில் அபிப்பிராயமொன்றை, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் வெளிப்படுத்தியுள்ளார்.
கம்பஹாவில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் பொதுகூட்டத்தை உரையாற்றுகையில் அவர் இது குறித்து கருத்து தெரிவித்திருந்தார். இதன்போது அவர் கூறுகையில்,
யாராவது பார்த்தீர்களா?
இந்த புத்தாண்டில் ஜனாதிபதியின் மனைவி புத்தாண்டு சுப நேரத்தில் கெவுமும் கொக்கிஸும் செய்ததை யாராவது பார்த்தீர்களா? முன்னாடி அப்படியா கெவும் கொக்கிஸ் என்று சுட்டுத் திரிந்தார்கள், அதனை சமூக வலைதளங்களில் இட்டு பிரசித்தம் தேடினார்கள்.
இப்போது அதெல்லாம் இல்லையே, அதுவே பெரும் மாறுதல். அது மட்டும் இல்லாமல், கடந்த ஐந்து மாதங்களில் நடந்த மாற்றங்களும் பார்க்க வேண்டியதே எனவும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்திருந்தார்.