போராட்டக்காரர்களுக்கு ஆதரவளித்தவர் பொலிஸ் உத்தியோகத்தரா? விசாரணை தீவிரம்!
அரசாங்கத்திற்கு எதிராக கொட்டாவாயில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் , பொதுமக்களுக்கு ஆதரவளித்த பொலிஸ் சீருடைக்கு நிகரான உடையை அணிந்தவர் பொலிஸ் உத்தியோத்தரா என்பது இன்னும் நிரூபிக்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆதரவளித்தமைக்கு சாட்சியமளிக்கும் பரவலான காணொளிக்கு பதிலளிக்கும்போதே பொலிஸார் இதனை கூறினர்.
போராட்டத்தின்போது, காக்கி உடையில், கருப்பு ஜாக்கெட் மற்றும் வெள்ளை ஹெல்மெட் அணிந்திருந்த ஒருவர்,
“நாங்கள் சீருடையில் இருந்தாலும் உங்களுடன் இருக்கிறோம்” என்று கூட்டத்தில் உரையாற்றினார்.
இந்நிலையில், அவர் உண்மையான பொலிஸாரா அல்லது வேறு சேவையை சேர்ந்தவரா அல்லது சாதாரண மனிதரா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.