ஜனாதிபதி, பிரதமர் கலந்து கொண்ட திருமணம்; பணம் கொடுக்கவில்லை; தரகர் பொலிஸில் முறைப்பாடு
கம்பஹா மாவட்டத்தை சேர்ந்த இராஜாங்க அமைச்சர் ஒருவர் கலியாண தரகருக்கு தரகு பணத்தை கொடுக்காமல் ஏமாற்றிவருவதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது .
இராஜாங்க அமைச்சரொருவரின் மாமனாரே மகளுக்கு மணமகன் ஒருவரை தேடித்தருமாறு குறித்த நபருக்கு தெரியப்படுத்தியுள்ளார். இந்த யோசனை வழங்கிய நபர் கட்டுநாயக்க முதலீட்டு அபிவிருத்தி வலயத்திலுள்ள தொழிற்சாலையொன்றில் முக்கிய பதவியிலிருப்பவர் என்பதுடன் குறித்த தரகரை தொழிற்சாலைக்கு அழைத்து இதுதொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.
இந்நிலையில் இந்த செயற்பாட்டுக்காக தனக்கு வீடொன்றை பெற்றுக்கொடுக்குமாறு தரகர் கோரிக்கை முன்வைத்துள்ளார். தரகரின் கோரிக்கைக்கு குறித்த இராஜாங்க அமைச்சரின் மாமனாரும் இணக்கம் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, குறித்த தரகர் பவ்வேறு முயற்சிகளை எடுத்து மணமகனொருவரை தேடிக்கொடுத்த நிலையில், திருமணபந்தத்தில் இணைந்துக்கொள்வதற்கான நிகழ்வொன்று சில மாதங்களுக்கு முன்னர் கொழும்பிலுள்ள ஹோட்டலொன்றில் இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர். இருந்தபோதிலும், தன்னை அந்த நிகழ்வுக்கு அழைக்கவில்லையென தரகர் கூறியுள்ளார்.
அந்த நிகழ்வின் பின்னர் சில மாதங்கள் கடந்துள்ளபோதிலும் வாக்குறுதி கொடுத்ததுபோல இராஜாங்க அமைச்சரின் மாமனரால் தமக்கான கொடுப்பனவு கொடுக்கப்படவில்லை என்றும் அதுதொடர்பில் தொடர்ச்சியான கோரிக்கை முன்வைக்கப்பட்டதன் பின்னர் அவ்வப்போது தனது வங்கி கணக்கில் ஐயாயிரம் ரூபா என்ற அடிப்படையில் முப்பதாயிரம் ரூபா பணம் வைப்பிலடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதோடு இராஜாங்க அமைச்சரின் மகளுக்கு மணமகன் தேடிக்கொடுத்தது தான் என்பது இராஜாங்க அமைச்சருக்கு தெரியாதென்று கருதுவதாகவும், இராஜாங்க அமைச்சரின் மாமனார் வழங்கிய வாக்குறுதிக்கமைய வாக்குறுதியை நிறைவேற்றவில்லையெனவும் தரகர் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பில முறைப்பாடு செய்வதற்காக தான் வசிக்கும் இடத்துக்கு பொறுப்பான பொலிஸ் நிலையத்துக்கு சென்று பெற்றுக்கொண்ட ஆலோசனைக்கமைய பியகம பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ததாகவும் அந்த திருமண தரகர் தெரிவித்துள்ளார்.