டயானா கமகே வழக்கு மே மாதம் விசாரணைக்கு
இலங்கை முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மே 28 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
போலி ஆவணத்தைச் சமர்ப்பித்து இலங்கை கடவுச்சீட்டைப் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் டயானா கமகேவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது அரச தரப்பு சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.
2004 ஆம் ஆண்டு ஒக்டோபர் 9 ஆம் திகதி முதல் அதே ஆண்டு டிசம்பர் 1 ஆம் திகதி வரை பாணந்துறை மற்றும் கொழும்பு பகுதிகளில் போலியான தேசிய அடையாள அட்டையைக் காட்டி இலங்கை கடவுச்சீட்டை மோசடியாகப் பெற்றதாக டயானா கமகே மீது, சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.