இராணுவத்தினரின் விசேட கண்காணிப்பில் கிளிநொச்சி தர்மபுரம்
கிளிநொச்சி தர்மபுரம் கிராம சேவையாளர் பிரிவு இன்று இராணுவத்தினரின் விசேட கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் மேலதிக தீர்மானம் நாளை (18) எடுக்கப்படலாம் என சுகாதார பிரிவு தெரிவிக்கின்றது.
நேற்றைய தினம் கிளிநொச்சி ,தர்மபுரம் பிரிவில் 08 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அடையாளம் காணப்பட்டவர்களில் 7ம் யூனிற் பகுதியில் 07 பேரும், 5ம் யூனிற் பகுதியில் ஒருவரும் தொற்றுக்குள்ளான நிலையில், அவர்கள் PCR பரிசோதனைகளின் பின்னர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் உடன் அமுலுக்கு வரும் வகையில் குறித்த பகுதி சுகாதார தரப்பினர் மற்றும் இராணுவத்தினரின் விசேட கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக மாவட்ட கோவிட் செயலணி தெரிவித்துள்ளது.
அதேவேளை மேலதிக விடயங்கள் தொடர்பில் இன்று ஆராய்ந்து தீர்மானம் எட்டப்படும் என மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.