பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க பெரேரா
மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக முன்மொழியப்பட்டுள்ள தொழிலதிபர் தம்மிக்க பெரேரா உட்பட நால்வர் தொடர்பில் எதிர்வரும் வாரத்தில் கலந்துரையாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் கூறுகையில்,
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் மேலும் கலந்துரையாடப்படும் எனவும் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதில் அவசரமில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் வியாழன் (9) மற்றுமொரு சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
எனினும் ஜனாதிபதித் தேர்தல் வருமாயின் தம்மிக்க பெரேராவை வேட்பாளராக முன்னிறுத்துவதற்கே பொதுஜன பெரமுனவின் மேல்மட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.