சஜித்துடன் கைகோர்த்த தேவிகா!
அரசாங்க குடும்ப சுகாதார சேவைகள் சங்கத்தின் தலைவி , தேவிகா கொடித்துவக்கு சஜித் பிராமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளார்.
அதன்படி, தேவிகா கொடித்துவக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் சுகாதார கொள்கை உருவாக்கும் குழு, தேசிய குடும்ப சுகாதார சேவைகள் கொள்கை உருவாக்கும் குழு மற்றும் நோய் தடுப்பு கொள்கை ஆலோசனை குழு ஆகியவற்றின் நிர்வாக உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
புதிய நியமனம் வழங்கிய சஜித்
அவரின் இந்த நியமனத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஏற்பாடு செய்துள்ளார். தேவிகா கொடித்துவக்கு அரசாங்க குடும்ப சுகாதார சேவைகள் சங்கத்தின் தலைவராகவும், அரசியல் மற்றும் சமூக ஆர்வலராகவும் பணியாற்றி வருகிறார்.
ஆகஸ்ட் 1969 இல் பேராதனையில் பிறந்த இவர், தனது ஆரம்பக் கல்வியை பேராதனைப் பல்கலைக்கழக தோட்டக்கலை கல்லூரியிலும், பின்னர் இடைநிலைக் கல்வியை கண்டி ஹேமமாலி பெண்கள் கல்லூரியிலும் பெற்றார்.
தனது பாடசாலை நாட்களிலிருந்தே பாடநெறிக்கு அப்பாற்பட்ட செயல்களில் ஈடுபட்டிருந்தார் மற்றும் செஞ்சிலுவைச் சங்கத்தில் சேர்ந்தார் மற்றும் மிகக் குறுகிய காலத்திற்குள் செஞ்சிலுவைச் செவிலியராக பணியாற்ற நியமிக்கப்பட்டார்.
இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக, குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்கள் எதிர்கொள்ளும் அநீதிகளுக்கு அஞ்சாமல் எழுந்து நின்று பொதுச் சேவை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் துணைத் தலைவர், சுகாதார வல்லுநர்கள் கூட்டமைப்பின் அழைப்பாளர் போன்ற பல பதவிகளையும் தேவிகா கொடித்துவக்கு வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.