யாழில் தமிழர் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயல்; அழிக்கப்பட்ட மிகத்தொன்மையான ஆலயம்!(Photos)
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள மிகப்பழமைவாய்ந்த போர்த்துக்கீசர் கால வரலாற்று பிரசித்தி பெற்ற கீரிமலை சிவன் ஆலயம் முழுமையாக இடித்து அழிக்கப்பட்டு அதிபர் மாளிகை அமைக்கப்பட்டுள்ள விடயம் வெளிசத்துக்கு வந்துள்ளது.
வலி. வடக்குப் பகுதியில் உள்ள கீரிமலை கிருஸ்ணன் ஆலயத்தின் ஆலய நிர்வாகத்தினர் சிலரை கடந்த வெள்ளிக்கிழமை கடற்படையினர் பாதுகாப்பு வலயத்திற்குள் அழைத்துச் சென்றுள்ளனர்.
கீரிமலையில் இருந்த ஆதிசிவன் ஆலயத்தின் தற்போதைய நிலையை காண்பித்த நிலையில் இது தொடர்பிலான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
செஞ்சொற்செல்வர் ஆறு திருமுருகன் கவலை
கீரிமலையில் இருந்த ஆதிசிவன் ஆலயம் இடித்து அழிக்கப்பட்ட செய்தி சைவ மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளதாக செஞ்சொற்செல்வர் ஆறு திருமுருகன் தெரிவித்தார்.
கீரிமலையில் போர்த்துக்கீசர் காலத்தில் இருந்தே அமையப்பெற்ற ஆதிச்சிவன் ஆலயமானது அதன் அருகே பாதாளகங்கை எனப்படும் நன்நீர் கிணற்றுடன் கூடிய சிவன் ஆலயம் ஆகும் .
அதுமட்டுமல்லாது இதன் அருகே சித்தர்களின் தியான மடமும் இருந்தன. அதிலே நல்லூர் தேரடிச் சித்தர் என எல்லோராலும் அறியப்பட்ட சடையம்மாவின் சமாதியுடன் சடையம்மா மடம் என்பனவும் இருந்தன.
இதேபோன்று அப்பகுதியிலே நல்லை ஆதீனத்தின் முதலாவது குரு முதல்வரான மணி ஐயரின் குருவின் சமாதி என்பனவும் அங்கே மிக நீண்டகாலமாக இருந்தது. அதேபோன்ற பழமையான கதிரை ஆண்டவர் ஆலயமும் இருந்தது.
இந்நிலையில் மிகவும் பிரசித்தி பெற்றதும் தொன்மை வாய்ந்ததுமான இவ்வாறான ஆன்மீக அடையாளங்கள் அனைத்தையும் அழிக்கப்பட்டு ஒரு ஆடம்பர மாளிகை அமைக்கப்பட்டுள்ளமை வேதனையை தருவதாகவும் அவர் கூறினார்.
இந்நிலையில் இடிக்கப்பட்ட ஆலயங்கள் வரலாற்று சின்னங்கள் என்பதுன் தமிழர் பகுதியின் போற்றிப்பாதுகாக்கப்படவேண்டிய பொக்கிக்ஷமும் ஆகும்.