பிரான்ஸில் பிரதமர் வேட்பாளர் பெண்ணிடம் செய்த இழிவான செயல்! வெளியான புகைப்படம்
பிரான்ஸின் பிரதமர் வேட்பாளர் ஒருவர் காரில் அமர்ந்தபடி பெண்ணிடம் தவறான விரல் சைகையை காண்பித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Marseille நகரத்திற்கு ஜனாதிபதி வேட்பாளராகக் குறிப்பிடப்பட்ட பிரெஞ்சு தீவிர வலதுசாரி ஊடகப் பகுப்பாய்வாளர் எரிக் ஜெம்மோர் (Eric Zemmour), விஜயம் மேற்கொண்டபோது, வெறுப்பை காட்டிய ஒரு பெண் ஒருவரிடம் நாடு விரல் சைகையை காண்பித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் பரவிவருகிறது.
இது தொடர்பில் அமைச்சர் ஒருவர் பேசியது, இவ்வாறான மோசமான சைகையை இளைஞர்கள் பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரித்தார். அவரது பிரச்சாரப் பயணத்தின் ஒரு பகுதியாக, ஜெம்மூர் வெள்ளிக்கிழமை மார்சேயிலுக்கு சென்றார். அவர் அப்போது ரயில் நிலையத்தை விட்டு வெளியேறும் போது, அவரை ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர் கேலி செய்தும், கும்மியடித்தும் வரவேற்றனர்.

இதனையடுத்து, சனிக்கிழமை முனிசிபல் ஹாலுக்கு வெளியே, அவர் ஒரு காரில் அமர்ந்திருக்கும்போது, ஒரு பெண் எரிக் ஜெமோரின் காரை அணுகி நடுவிரல் சைகையை காண்பித்து முதலில் தனது எதிர்ப்பை காட்டியுள்ளார். உடனடியாக கார் கண்ணாடியை கீழே இறக்கிய ஜெம்மூர், அப்பெண்ணுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக வேகமாக அவரும் அதே சைகையை காண்பித்துள்ளார்.
AFP புகைப்படக் கலைஞரின் கமராவில் இந்த ஆபாசமான சைகை பதிவாகியது. "பிரான்ஸின் டிரம்ப்" என்று அழைக்கப்படும் 63 வயதான நபர், செப்டம்பர் மாதம் அரசியலில் பிரமிக்க வைக்கும் வகையில் நுழைந்துள்ளார்.
அதன்போது அவர் மாநிலம் தழுவிய விஜயத்தை மேற்கொண்டார், அது பிரச்சாரத்தை இரட்டிப்பாக்கியது.
அடுத்த மாத தொடக்கத்தில் அவர் தனது அதிபர் தேர்தல் பிரச்சாரத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.