குடியால் விபரீத முடிவெடுத்த கணவர்; நிர்க்கதியான குடும்பம் (Video)
எமது தலைமுறைகளை தாண்டியும் பேசப்படும் ஒரு பிரதேசம் தமிழர் பகுதியின் முல்லைத்தீவு மாவட்டம் ஆகும்.
ஏனெனில் போர்காலத்தின் இறுதிக்கட்டத்தில் பலர் புதைக்கப்பட்ட , அரசாங்க படைகள் அரங்கேற்றிய பல கொடுமைகளை உலகிற்கு எடுத்துக்கூறும் ஓர் பிரதேசமாக முல்லைத்தீவு மாவட்டம் உள்ளது.
எமது மக்கள் படும் துன்பங்கள் துயரங்களை வெளிஉலகிற்கு தெரியபடுத்தும் நிகழ்வாக எமது உறவுப்பாலம் நிகழ்ச்சி அமைந்துள்ளது.
தொடரும் அவலநிலை
போரின் வடுக்கள் இன்னும் மாறாத நிலையிலும் , தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியாலும் வாழ்வை கொண்டுசெல்வதில் பெரும் துன்பங்களையும் துயரங்களையும் எதிர்கொண்டுள்ளனர்.
அந்தவகையில் கணவரை இழந்த நிலையில் பிள்ளைகளுடன் இளம் தாயொருவரின் துன்பவியலை எடுத்துக் கூறுவதாக இன்றைய உறவுப்பாலம் நிகழ்ச்சி அமைந்துள்ளது.