வடமாகாண பிரதி பிரதம செயலாளராக திருமதி சுகுணரதி தெய்வேந்திரம்
வடமாகாண பிரதி பிரதம செயலாளராக திருமதி சுகுணரதி தெய்வேந்திரம் தனது கடமைகளை நேற்றையதினம் பொறுப்பேற்றுள்ளார். வடமாகாண மனிதவள முகாமைத்துவம் மற்றும் பயிற்சி நெறி பிரதிப் பிரதம செயலாளராக வடமாகாண ஆளுநரால் அவருக்கான நியமன கடிதம் வழங்கப்பட்டது.
திருமதி சுகுணரதி தெய்வேந்திரன் யாழ்.பிரதேச செயலாளராக, யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக, இந்து கலாச்சார அமைச்சின் செயலாளராக பணியாற்றியவராவார்.
வடமாகாண சபைக்கு மாற்றம்
அதன் பின்னர் பொதுநிர்வாக உள்நாட்டவர்கள் அமைச்சில் சிரேஷ்ட நிலை அதிகாரியாக கடமையாற்றிய நிலையில் தற்போது வடமாகாண சபைக்கு மாற்றம் பெற்று வந்துள்ளார்.
அதேவேளை வடமாகாண மனிதவள முகாமைத்துவ பயிற்சி நெறியின் பிரதி பிரதம செயலாளராக
கடமையாற்றிய உமாமகேஸ்வரன் கல்வி நிர்வாக பண்பாட்டு அலுவல்கள் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளராக மாற்றப்பட்ட நிலையில் அவரின் வெற்றிடத்திற்கு சுகுணரதி தெய்வேந்திரம் நியமிக்கப்பட்டுள்ளார்.